செமாந்தான் எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Semantan MRT Station; மலாய்: Stesen MRT Semantan) என்பது மலேசியா, கோலாலம்பூர், டாமன்சாரா அயிட்ஸ் பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திசம்பர் 16, 2016 அன்று திறக்கப்பட்டது.
செமாந்தான் எம்ஆர்டி நிலையம், மலேசியாவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் (ஐ.நா.) அலுவலகம்; மற்றும் டுங்குன் சாலை (Jalan Dungun) பகுதிக்கு அருகிலுள்ள இசுபிரிண்ட் விரைவுச்சாலையின் செமாந்தான் மாற்றுச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் முதல் கட்டக் கட்டுமானத்தின் போது, செமாந்தான் எம்ஆர்டி நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் இதே செமாந்தான் நிலையத்திலேயே இறங்க வேண்டிய தெற்கு முனையமாக இந்த நிலையம் விளங்கியது. அந்தக் கட்டத்தில் இந்த நிலையத்திற்கு வரும் தொடருந்துகள், சுல்தான் அப்துல் ஆலிம் சாலைக்கு மேலே உள்ள குறுக்குவெட்டுப் பாதையில் திரும்பி, சுங்கை பூலோவை நோக்கித் திரும்பிச் செல்லும். சூலை 17, 2017 அன்று இரண்டாம் கட்டச் செயல்பாட்டிற்குப் பின்னர், செமாந்தான் எம்ஆர்டி நிலையத்தின் தெற்கு முனையமாக காஜாங் தொடருந்து நிலையம் மாறியது.
2017 ஆகத்து 21-ஆம் தேதி இந்த நிலையம் மனுலைப்-செமாந்தான் நிலையம் (Manulife-Semantan) என மறுபெயரிடப்பட்டது. அப்போது நிலையத்தின் பெயரிடும் உரிமைக்கான 5 ஆண்டு ஒப்பந்தத்தை மனுலைப் எனும் கனடிய நிதி நிறுவனம் பெற்றது.[1] இருப்பினும், இந்த நிலையத்திற்கு பெயரிடும் உரிமை திசம்பர் 1, 2023 அன்று முற்றுப் பெற்றது.[2]
Remove ads
காஜாங் வழித்தடம்
காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[3]
எம்ஆர்டி நிறுவனம்
இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு சொந்தமானது; மற்றும் ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் சேவையின் ஒரு பகுதியாகவும்; ஒருங்கிணைந்த கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும் இயக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 9; வழித்தடத்தின் நிறம் பச்சை என பொறிக்கப்பட்டு உள்ளது. எம்ஆர்டி நிறுவனத்தின் கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்து திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று தொடருந்து வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]
நிலைய அமைப்பு
L2 | நடைமேடை தளம் | பக்க நடைமேடை |
நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் KG35 (→) | ||
நடைமேடை 2 9 காஜாங் (←) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள் |
G | தரை தளம் | நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள் |
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
பேருந்து சேவைகள்
KG13 பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தின் நுழைவாயில் B மூடப்பட்டதால், டாமன்சாரா வழித்தடத்தின் T818
T819
T820
T852 பேருந்துகள் மறு அறிவிப்பு வரும் வரை இந்த செமாந்தான் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இயக்கப்படும்.[5]
Remove ads
காட்சியகம்
செமாந்தான் எம்ஆர்டி நிலையம் (2023 - 2024)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads