செரி செத்தியா கொமுட்டர் நிலையம்
பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செரி செத்தியா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Seri Setia Komuter Station; மலாய்: Stesen Komuter Seri Setia); சீனம்: 斯里斯迪亚) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
செரி செத்தியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 51 இல் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது.[2]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் பந்தாய் புதிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
Remove ads
பொது
செரி செத்தியா நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், சுங்கைவே பகுதியில் வாழும் பயணிகள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கின்னஸ் நிலையம்
இந்த நிலையம் முன்பு 1980-களில் கின்னஸ் நிலையம் (Guinness Station) என்று பெயரிடப்பட்ட ஒரு சரக்கு நிலையமாக இருந்தது.[3] இந்த நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கின்னஸ் மதுபான ஆலையின் (Guinness Brewery) பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது,
தற்போதைய செரி செத்தியா கிராமம் என்பது அருகிலுள்ள சுங்கைவே கிராமத்திலிருந்து உருவானது. சுங்கைவேயின் தற்போதைய பெயர் செரி செத்தியா புதுக்கிராமம் (Seri Setia New Village). இந்த நிலையத்திலிருந்து மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையின் (Federal Highway Malaysia) குறுக்கே சுங்கைவே கிராமத்திற்கு இணைப்புப் பாலம் உள்ளது.
Remove ads
காட்சியகம்
- செரி செத்தியா நிலையம் (2014)
- பின்புலத்தில் கின்னஸ் மதுபான ஆலை
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads