செலாயாங் மருத்துவமனை

From Wikipedia, the free encyclopedia

செலாயாங் மருத்துவமனைmap
Remove ads

செலாயாங் மருத்துவமனை (மலாய்:Hospital Selayang; ஆங்கிலம்:Selayang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம், செலாயாங் நகர்ப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஆகும்.[2]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
செலாயாங் மருத்துவமனை அமைவிடம்

இந்த மருத்துவமனை இரண்டாம் நிலை மற்றும் தேசிய மூன்றாம் நிலை பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது.

செலாயாங் மருத்துவமனை கட்டப்படும் போது, சுகாதார அமைச்சின் (MOH) 2020 தூர நோக்கக் கொள்கையின் அடிப்படையில் கட்டப்பட்டது. இதன் மூலம் மலேசியா, 2020-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. இதன் காரணமாக செலாயாங் மருத்துவமனை உலகத் தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

Remove ads

பொது

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA (UiTM) மருத்துவத் துறை மாணவர்கள் இந்த மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனையை நிர்வகித்து பராமரிப்பதற்கு முழு மருத்துவமனை தகவல் அமைப்பு (Full Hospital Information System) எனும் முறைமை பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவமனை தகவல் அமைப்பு; ’மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு’ (Total Hospital Information System - T.H.I.S.) என்று அழைக்கப்படுகிறது.[3]

இந்த மருத்துவமனையில் 960 படுக்கைகள் கொண்ட 20 நோயாளிக் கூடங்கள் (வார்டுகள்) உள்ளன. 'மொத்த மருத்துவமனை தகவல் அமைப்பு' (Total Hospital Information System) எனும் நவீனத் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்திய இரண்டாவது மருத்துவமனை எனும் சிறப்பும் இந்த மருத்துவமனைக்கு உள்ளது.

முகவரி

Hospital Selayang Lebuhraya Selayang-Kepong,
68100 Batu Caves, Selangor Darul Ehsan.
Tel : +603-6126 3333 Faks : +603-6137 7097 Email: enquiry@selayanghospital.gov.my

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads