சேத்துப்பட்டு (சென்னை)
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேத்துப்பட்டு (ஆங்கிலம்: Chetpet), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதைக்கு அருகில் உள்ளது. சேத்துப்பட்டு தொடருந்து நிலையத்திற்கும், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது, இது நகரத்தில் கடைசியாக எஞ்சியிருக்கும் இயற்கை நீர்நிலைகளில் ஒன்றாகும்.
சேத்துப்பட்டு தொடருந்து நிலையத்திலிருந்து, வடகிழக்கில் உள்ள அடுத்த நிலையம், சென்னை எழும்பூர் நிலையமாகும்.
Remove ads
வரலாறு
எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கத்துடன் சேர்ந்து சேத்துப்பட்டும், ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சேத்துப்பட்டு குளம் அருகிலுள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[3]
அமைவிடம்
சென்னையின் நடுவே அமைந்திருக்கும் சேத்துப்பட்டு, சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
- ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- லேடி ஆண்டல் வெங்கட சுப்பா ராவ் மெட்ரிகுலேசன் பள்ளி
- வள்ளல் சபாபதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி
- மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி
- மெட்ராஸ் சேவா சதான் மேல்நிலைப்பள்ளி
- ஒன்றிய கிறிஸ்டியன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
படங்கள்
- 1905இல் சேத்துப்பட்டு கிராமம்
- சேத்துப்பட்டு ஏரி
- சேத்துப்பட்டு ஏரி
- சேத்துப்பட்டு ஏரி
- சேத்துப்பட்டு காட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads