சேந்தமங்கலம்
தமிழ் நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேந்தமங்கலம் (Sendamangalam) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும்.
சேந்தமங்கலம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 8 கி.மீ. தொலைவிலும்; தெற்கில் இராசிபுரம் 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சேந்தமங்கலம் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய ஆறு காவேரி ஆகும். இது சென்னை யிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், பெங்களூரு விலிருந்து 255 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி யிலிருந்து 93 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
நகராட்சியின் அமைப்பு
8.8 ச.கி.மீ. பரப்பும், 18 மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி, சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
பார்க்க வேண்டிய இடங்கள்
சேந்தமங்கலம் பகுதியில் சிறப்பு வாய்ந்த இடங்களாக தத்தகிரி முருகன் கோயில், சிவன் கோயில், சேந்தமங்கலம், கொல்லிமலை, பெருமாள் கோயில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவை திகழ்கின்றன.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊர் 5,484 வீடுகளும், 19,750 மக்கள்தொகையும் கொண்டது.[2]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,085 மக்கள் இங்கு வசித்தனர்.[3] அவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். சேந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். சேந்தமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோராக இருந்தனர்.
Remove ads
அரசியல்
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி), இராசிபுரம் மக்களவைத் தொகுதிக்கு (தனி) உட்பட்டது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயர்: சாந்தி (தே.மு.தி.க கட்சி)[4] சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்புக்கு பின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி(தனி) நாமக்கல் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியுமே மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளாகும். மற்ற அனைத்து தனி தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கானது.
Remove ads
புதிய வட்டமாக மாற்றம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம் வட்டத்தில் சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய குறுவட்டங்களும், நாமக்கல் வட்டத்தில் நாமக்கல், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, நல்லிபாளையம், கீரம்பூர், மோகனூர், வளையப்பட்டி ஆகிய குறுவட்டங்களும் அடங்கியிருக்கும். ரூ.2.66 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலக புதியக் கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு, ரூ.38.13 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி ஆகிய குறுவட்ட அளவையர்களுக்கு குடியிருப்புடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சேந்தமங்கலம் - புதன்சந்தை சாலையில் பச்சுடையாம்பட்டி புதூரில் செயல்பட்டு வருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads