சேர்வைகாரன் ஊரணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

சேர்வைகாரன் ஊரணிmap
Remove ads

சேர்வைக்காரன் ஊரணி (Servaikan oorani), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது ஆற்றாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும், மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3234 ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல் அமைவிடம்

இவ்வூரின் அமைவிடம் 9°19'36.3"N 78°58'48.8"E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2 மீட்டர்(6 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அமைவிடம்

இராமநாதபுரத்தின் கிழக்கே இவ்வூர் அமைந்துள்ளது. கொச்சியையும் இராமேசுவரத்தையும்இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 அல்லது 85க்கு அடுத்துள்ளது. இராமேசுவரம்-இராமநாதபுரம் தடவழியில் அமைந்துள்ளது.

தெற்கே பாக் நீரிணையும் வடக்கே வைகை ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே உச்சிப்புளியும், மேற்கே இந்தியக் கடற்படையின் கடற்படை வான்களமான பருந்து கடற்படை வானூர்தி தளம் இங்கு அமைந்துள்ளது.

136 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்அண்மையில் உள்ள வானூர்தி நிலையமாகும்.

Remove ads

தெருக்கள்

  1. மேற்கு தெரு (எ) செம்மநாட்டு மறவர் தெரு
  2. நடுவலசை
  3. கிழக்கு தெரு
  4. சேதுபதி நகர்
  5. முத்தையன் தெரு

அரசு கட்டிடங்கள்

  1. நியாய விலைக்கடை
  2. மகளிர் மேம்பாட்டு குழு
  3. விளையாட்டு கட்டிடம்

பள்ளி

இங்கு 1 முதல் 5 வரை குழந்தைகள் படிக்க பள்ளி ஒன்று அரசு தொடக்கப்பள்ளி சேர்வைகாரன் ஊரணி உள்ளது. இப்பள்ளியானது மேற்குத்தெருவில் அமைந்துள்ளது. 5ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads