சொர்க்க கரிச்சான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொர்க்க கரிச்சான் (Paradise drongo) அல்லது நாடா-வால் கரிச்சான் (டைகுருசு மெகர்கிஞ்சசு) என்பது டைக்ரூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
Remove ads
விளக்கம்
சொர்க்க கரிச்சான் பிசுமார்க் தீவுக்கூட்டம், நியூ அயர்லாந்து தீவு, பப்புவா நியூ கினியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். சொர்க்க கரிச்சானின் மொத்த நீளம் 51 முதல் 63 cm (20 முதல் 25 அங்) ஆகும். உடல் நிறை 130 g (4.6 oz) ஆகும். இது கரிச்சான் குருவிகளில் மிகப்பெரிய சிற்றினமாக இருக்கின்றது.[2]
வகைப்பாட்டியல்
1832ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் வல்லுநர்களான ஜீன் குய் மற்றும் ஜோசப் கெய்மார்ட் நியூ கினியாவில் உள்ள டோரேயில் (இப்போது மனோக்வாரி ) சேகரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு மாதிரியிலிருந்து சொர்க்க கரிச்சான் விவரிக்கப்பட்டது. இவர்கள் எடோலியசு மெகர்கிஞ்சசு என இருசொல் பெயரை வழங்கினர்.[a] இங்கிலாந்து விலங்கியல் வல்லுநர் பிலிப் ஸ்க்லேட்டர் 1877-ல் குவாய் மற்றும் கைமார்ட் குறிப்பிட்ட இடம் பிழையாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார். பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள நியூ அயர்லாந்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, ஆனால் எதுவும் நியூ கினியாவிலிருந்து சேகரிக்கப்படவில்லை.[4] இந்த இடம் இப்போது நியூ அயர்லாந்தின் தெற்குப் பகுதியில் போர்ட் பிரஸ்லின் என நியமிக்கப்பட்டுள்ளது.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads