ஜூரோங் ஊர்வன பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜூரோங் ஊர்வன பூங்கா (Jurong Reptile Park) என்பது சிங்கப்பூரின் ஜுராங் மாவட்டத்தின் பூன் லே திட்டமிடல் பகுதியில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். இப்பூங்கா 2 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலை. இது ஆசியாவின் மிகப்பெரிய ஊர்வன பூங்காவாக இருந்தது.
இந்த ஊர்வன பூங்கா செயல்பாட்டிற்கு 2003 வரை ஜுராங் கால்பந்து குழு நிதியுதவி அளித்தது.
Remove ads
விலங்குகள் மற்றும் கண்காட்சிகள்
ஜூரோங் ஊர்வன பூங்காவில் முதலை, கொமோடோ டிராகன், அனகோண்டா பாம்பு, மலைப்பாம்பு, நாகப்பாம்பு மற்றும் ஆமை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்வன சிற்றினங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்டவை நச்சுத்தன்மை கொண்டவை.[2][3] இதில் பேரோந்திகள், நூற்றுக்கணக்கான முதலைகள் வாழும் பகுதியில் ஒரு நடைபாதை பாலம்,[4] நீருக்கடியில் கண்காணிப்பு மாடம் மற்றும் ஆசிய வெப்பமண்டலக் காட்டின் ஓசை உட்பட முதலைகளின் இரவு நேரத்தை உருவகப்படுத்திய கேவர்ன் ஆப் டார்க்னசு எனும் இருள் சூழ் பகுதியும் அடங்கும்.[2]
முதலைக்கு உணவு வழங்கும் நிகழ்வும் ஊர்வன படக் காட்சி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.[2] பார்வையாளர்கள் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றுடன் தங்கள் தாமி படங்களை எடுக்கலாம்.[3] ஊர்வன தோலில் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் காட்சியறையில் வாங்கலாம்.
Remove ads
மூடல்
சிங்கப்பூரில் 2006ஆம் ஆண்டு ஜூரோங் ஊர்வன பூங்கா மூடப்படும் போது மிகப் பெரிய விலங்குக் காட்சிச் சாலையாக இருந்தது. பிற பிரபலமான உயிரியல் பூங்காக்களாகிய ஜூரோங் பறவைகள் பூங்கா மற்றும் சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை காரணமாக ஜுராங் ஊர்வன பூங்கா மூடப்பட்டது.[1] இந்த தளம் இப்போது தி வில்லேஜ் @ஜுராங் கில்லால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads