ஜெய்ஹிந்த்புரம்
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்ஹிந்த்புரம் (ஆங்கிலம்: Jaihindpuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.905100°N 78.107800°E (அதாவது, 9°54'18.4"N, 78°06'28.1"E) ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
ஜெய்ஹிந்த்புரத்தில் இந்துக்கள் வழிபடும் வீரமாகாளியம்மன் கோயில் ஒன்று உள்ளது.[6] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பாண்டுரங்கன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.[7]
மதுரை அவனியாபுரம் பகுதியில், 2023-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 250 மாடுபிடி வீரர்களில் முதலிடம் வகித்த மாடுபிடி வீரர் விஜய், ஜெய்ஹிந்த்புரத்தைச் சார்ந்தவர்.[8]
ஜெய்ஹிந்த்புரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[9] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads