ஞானவாபி பள்ளிவாசல்

From Wikipedia, the free encyclopedia

ஞானவாபி பள்ளிவாசல்map
Remove ads

ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் (Gyan vapi mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது.[1] ஞான வாபி என்பதற்கு தமிழில் பேரரறிவுக் கிணறு என்று பொருள். பொ.ஊ. 1696-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க ஆணையிட்டார்.[2] கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஞான வாபி பள்ளிவாசலை கட்டப்படடு அன்சுமான் இந்த்ஜாமியா மஸ்ஜித் அமைப்பு நிர்வகிக்கிறது.[3]

விரைவான உண்மைகள் ஞான வாபி பள்ளிவாசல், அடிப்படைத் தகவல்கள் ...
Thumb
ஞானவாபி பள்ளிவாசல், காசி
Remove ads

வரலாறு

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி, பழைய காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில், பொ.ஊ. 1699-இல் ஞான வாபி பள்ளிவாசல் நிறுவப்பட்டது.[4][5] ஞான வாபி பள்ளிவாசலின் வெளிப்புறச் சுவர்களில், காசி விஸ்வநாதர் கோயிலின் சிதிலங்களை இன்றளவும் காணலாம்.[6] அவுரங்கசீப் இடிக்கப்பட்ட அசல் காசி விஸ்வநாதர் கோயிலின் முந்தைய மறுசீரமைப்பு என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. அசல் கோயில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. மசூதி நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பு பெரும்பாலும் அக்பர் ஆட்சியின் போது மான் சிங் என்பவரால் கட்டடப்பட்டது.[2]

மராத்தியப் பேரரசர் சிவாஜி ஆக்ரா சிறையிலிருந்து தப்பித்ததும், உள்ளூர் இந்து ஜமீந்தார்களின் கிளர்ச்சியும் அவுரங்கசீப் கோவிலை இடித்ததற்குக் காரணம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிவாஜி சிறையிலிருந்து தப்பிக்க, தனது இந்துப் படைத்தலைவர் முதலாம் ஜெய் சிங்கே காரணம் என அவுரங்கசீப் கருதினார். மேலும் இந்து நிலக்கிழார்கள் முகலாயப் பேரரசுக்கு எதிராக திரும்பியதே, காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட காரணமாயிற்று எனக் கருதுகிறார்கள். மேலும் காசி விஸ்வநாதர் கோயில் இடிப்பு, வாரணாசி நகரத்தில் வாழும் முகலாய எதிர்ப்பு பிரிவுகளுக்கும் இந்து சமயத் தலைவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகக் கருதப்பட்டது.[2]

ஞான வாபி பள்ளிவாசலின் இமாம் மௌலானா அப்துஸ் சலாம் நோமானி[7] (இறப்பு: 1987) மசூதியைக் கட்ட ஒரு கோயில் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஏற்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, தற்போது ஞான வாபி பள்ளிவாசல் உள்ள இடத்தில், ஹிஜ்ரி 1048-ஆம் ஆண்டில் (பொ.ஊ. 1638-39) மதராசா கட்ட அஸ்திவாரம் இட்ட்டவர்களில் மூன்றாவது முகலாய பேரரசர் அக்பர், மற்றும் அக்பரின் பேரன் மற்றும் அவுரங்கசீப்பின் தந்தை ஷாஜகான் ஆகிய்வர்களே காரணம் எனக்கூறுகிறார்.[8][9]

ஞான வாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு

பொ.ஊ. 1750-இல் ஜெப்பூர் இராச்சிய மன்னர், காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டும் நோக்கத்தில், ஞான வாபி பள்ளிவாசல் சுவற்றை ஒட்டிய இடங்களை விலைக்கு வாங்கினார்.[10]புதிய காசி விஸ்வநாதர் கோயிலை பொ.ஊ. 1780-இல் இந்தூர் இராச்சியத்தின் இராணி அகில்யாபாய் ஓல்கர் நிறுவினார்.

சர்ச்சைக்குரிய இந்த தளத்தை விவரிக்கும் பிரித்தானியப் பயணி ரெஜினோல்ட் எப்பர் என்பவர், அவுரங்கசீப், வாராணாசியில் ஒரு புனிதமான இந்துகளின் வழிபாட்டு இடத்தை தீட்டுப்படுத்தி அதன் மீது ஒரு மசூதியைக் கட்டியதாக தனது பயணக்குறிப்பில் 1824-ஆம் ஆண்டில் குறித்துள்ளார். மேலும் ஞான வாபி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள அமைந்த புதிய காசி விஸ்வநாதர் கோயிலை விட ஞான வாபி பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தையே இந்துக்கள் புனிதமாக கருதினர் என்றும் குறித்துள்ளார்.[11][12] மேலும் அவர ஞான வாபி பள்ளிவாசல் அமைந்த இடம் "காசி விஸ்வநாதர் கோயிலின் மண்டப் பகுதி என்றும்" என்று விவரித்தார். மேலும் அப்பகுதியில் செல்லும் பக்தர்கள் இராமா, இராமா என ஒலி எழுப்பிக் கொண்டே சென்றார்கள் எனக்குறித்துள்ளார்.[11]

பழைய காசி விஸ்வநாதர் கோயில் சிதிலங்கள்

Thumb
வாரணாசியின் ஞான வாபி பள்ளிவாசலை ஒட்டிச் சிதிலமைடந்த பழைய காசி விஸ்வநாதர் கோயில், ஜேம்ஸ் பிரின்ஸ்செப்பின் ஓவியம், ஆண்டு 1822

ஞான வாபி பள்ளிவாசலை ஒட்டிய கோயில் கட்டிட அமைப்பை, இடிக்கப்பட்ட பழைய அசல் காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதி என நீண்டகாலமாக உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். 1822-இல் ஆங்கிலேய கீழைநாட்டு அறிஞரான ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்பவர், வாரணாசியின் ஞான வாபி பள்ளிவாசல் சுவரை ஒட்டிச் சிதிலமைடந்த பழைய காசி விஸ்வநாதர் கோயிலைப் புகைப்படம் எடுத்து, அதனை ஆசியச் சமூக இதழில் வாரணாசி விளக்கம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்துக்கள் ஞான வாபி பள்ளிவாசலின் தரைப்பரப்பை, பழைய காசி விஸ்வநாதர் கோயிலின் தரைப்பரப்பாகக் கருதி வழிபடுகின்றனர்.[13][14] எம். ஏ. செரிங் (M. A. Sherring) (1868) என்பவர், வான வாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரை ஒட்டியுள்ள பகுதியில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் இடித்த கட்டிடப்பரப்புகளின் பெரும்பகுதி எச்சங்கள் இன்றும் காணப்படுகிறது என்றும், அவைகள் இந்து சமயத்தின் கட்டிடக் கூறுகள் மட்டும் அல்லாது, சமணம் அல்லது பௌத்த சமயங்களின் கட்டிடங்களின் கூறுகளும் தென்பட்டதாக தமது கட்டுரையில் குறித்துள்ளார்.[15]

இலண்டன் கிறித்துவ இயக்கத்தின் (London Missionary Society) எட்வின் கிரீவ்ஸ் (1909) என்பவர், ஞான வாபி பள்ளி வாசலை ஒட்டிய கோயிலின் கட்டிட இடுபாடுகள் குறித்து கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

மசூதியின் பின்புறம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பழைய விஸ்வநாதர் கோயிலின் சில உடைந்த எச்சங்கள் உள்ளன. இது முன்னர் சரியான உன்னத கட்டிடமாக இருந்திருக்க வேண்டும்; இந்த கோயில் கட்டிட இடிபாடுகளின் எச்சங்கள் விட, வாரணாசி நகரத்தின் கட்டிடக்கலை வழியில் மிகச்சிறந்த எதுவும் இல்லை. ஞான வாபி பள்ளிவாசலின் ஒரு சில தூண்களும் மிகவும் பழமையானவை என்று தோன்றுகிறது.

Edwin Greaves , Kashi the city illustrious, or Benares, 1909[16]

ஞானக் கிணறு பள்ளிவாசல்

Thumb
ஞான வாபி பள்ளிவாசலுக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த புனித ஞானக் கிணறு

காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், பள்ளிவாசலுக்கும் இடையே இந்த ஞானக் கிணறு அமைந்ததால், இதற்கு ஞானக் கிணறு பள்ளி வாசல் பெயராயிற்று. பழைய காசி விஸ்வநாதர் கோயிலை முகலாயர்கள் இடிக்கும் போது, கோயில் பூசாரிகள், மூலவரான லிங்கத்தை இந்த ஞானக் கிணற்றில் கிடத்தியிருக்கலாம் என வாரணாசியில் உள்ள இந்து சமய அறிஞர்கள் காலம் காலமாக கருதுகின்றனர்.[17][18]

இந்தியாவில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், வாராணாசி நகரத்தின் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாக ஞானக் கிணறு விளங்கியது.[19] 1824-இல் ஞானக் கிணற்றை பார்வையிட்ட ரெஜினால்டு எப்பர் என்ற ஆங்கிலேயர், கங்கை ஆற்றை விட ஞானக் கிணற்றை இந்து மக்கள் மிகவும் புனிதமாக கருதி, ஞானக் கிணற்று நீரை சிறிது தலையில் தெளித்து தூய்மைப்படுத்திக் கொண்டனர் எனக்குறித்துள்ளார்.[11]எம். ஏ. செர்ரிங் என்பவர் 1868-இல் வெளியிட்ட The Sacred City of the Hindus என்ற தனது நூலில், ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் தங்களை காணிக்கைப் பொருட்களை ஞான வாபி கிணற்றில் போட்டதில், கிணறு மிகவும் மாசு அடைந்திருந்தது எனக்குறித்துள்ளார்.[15] கிரீவ்ஸ் (1909) என்பவர் தனது கட்டுரையில், ஞானக் கிணறு அருகே ஒரு கல்லில் அமர்ந்திருந்த ஒரு பூசாரி, இந்து பக்தர்களுக்கு ஞானக் கிணற்று நீரை தலையில் தெளித்துக் கொண்டிருந்தார் எனக்குறிப்பிட்டுள்ளார்.[16]

1809-இல் ஏற்பட்ட வாரணாசி நகரத்தில் ஏற்பட்ட இந்து-முஸ்லீம் கலவரத்தின் போது, ஞான வாபி கிணற்றின் அருகில், முஸ்லீம்களின் கூட்டம் ஒன்று, இந்துக்கள் புனிதமாகக் கருதும் கறவைப் பசுவை கொன்று, அதன் குருதியை ஞானக் கிணற்றில் ஊற்றினர். இதற்கு பதிலடியாக, முஸ்லீம்கள் பாவமாக கருதும், பன்றி இறைச்சியை பல பள்ளிவாசல்களில் இந்துக்கள் வீசிச்சென்றனர். இதனால் இரு பிரிவினர்களும் ஆயுதம் ஏந்தி ஒருவருக்கொருவர் சன்டையிட்டதால் இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியானது. ஒரு வழியாக பிரித்தானிய இந்திய அரசு கலவரத்தை அடக்கியது.[20][11]

ஞானக் கிணறு மண்டபமும், கோயில்களும்

Thumb
ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கில் இந்து தெய்வங்களின் சிலைகளுடன் கூடிய சுவர்

குவாலியர் இராச்சிய மன்னர் தௌலத்ராவ் சிந்தியாவின் விதவை இராணி பைசா பாய் என்பவர் 1828-இல் ஞானக் கிணறு வளாகத்தில் கல் தூண்களை எழுப்பி ஒரு மண்டபத்தை நிறுவினார். செர்ரிங் (1868) என்ற ஆங்கிலேயர் ஞானக் கிணறு வளாகத்தில் 4 வரிசையில் அமைந்த, 40 கல் தூண்களைக் கொண்ட மண்டபம் குறித்து தம் கட்டுரையில் குறித்துள்ளார். ஞானக் கிணறு மண்டபத்தின் கிழக்கு திசையில், நேபாள மன்னர் நன்கொடையாக வழங்கிய சிவபெருமானின் வாகனமான நந்தியின் 7 அடி உயர சிலை அமைந்துள்ளது. கல் தூண் மண்டபத்தின் கிழக்கில் ஐதராபாத் இராச்சிய நிஜாமின் மனைவி வழங்கிய நன்கொடையில் நிறுவப்பட்ட சிவன் கோயில் அமைந்துள்ளது.

ஞானக் கிணற்றின் தூண் மண்டபத்தின் தெற்கே கருங்கல் மற்றும் பளிங்குக் கல்லால் ஆன இரண்டு சிறிய கோயில்கள் இருந்தன, அவை இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டிருந்தன. தூண் மண்டபத்தின முற்றத்தில், ஞான வாபி பள்ளிவாசலிருந்து சுமார் 150 கெஜம் தொலைவில், 60 அடி உயரமுள்ள ஒரு கோயில் இருந்தது, இதனை ஆதி விஸ்வநாதர் கோயில் என்று கூறப்படுகிறது. இக்கோயில் அசல் காசி விஸ்வநாத் கோயிலுக்கு முன்புறம் உள்ளது. [15]

ஞானக் கிணற்று வளாகத்தில் உள்ள இந்து சமய தெய்வங்களின் சிலைகளை குறித்து, ஆங்கிலேய அறிஞர் செர்ரிங் எழுதுகையில், இதனை உள்ளூர் மக்கள் மகாதேவரின் சபை என அழைத்தனர் எனக்குறித்துள்ளார். இத்தெய்வங்களின் சிலைகள் புதியது அல்ல என்றும், இவைகள் முகலாயர்களால் இடிக்கப்பட்ட ஆதி விஸ்வநாதர் கோயிலிருந்து எடுத்து வரப்பட்டு, ஞானக் கிணறு வளாகத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கலாம் என செர்ரிங் கருதுகிறார்.

வானக் கிணறு வளாக முற்றத்தின் நடுவில், பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் முஸ்லீம்கள் ஒரு நுழைவாயிலை அமைத்தனர் என்றும் அந்நுழைவாயிலில் இந்துக்கள் நுழைய முஸ்லீம்கள் அனுமதிக்கவில்லை என்றும் தமது நூலில் எழுதுகிறார். செர்ரிங் மேலும் கூறுகையில், இந்துக்கள் நுழைவாயிலைக் கடந்து செல்லும் பாதையில் இருந்த அரச மரத்தை வணங்கினர் என்றும், மேலும் முஸ்லிம்களை அதிலிருந்து ஒரு இலையை கூட பறிக்க இந்துக்கள் அனுமதிக்கவில்லை.[15]

ஞானக் கிணற்றின் கல் தூண் மண்டபம் மற்றும் நந்தி சிலை பற்றி கிரீவ்ஸ் (1909) என்பவர் குறித்துள்ளார். மேலும் நந்தி சிலையை பக்தர்கள் சுதந்திரமாக வணங்கினர் என்றும் குறித்துள்ளார். இந்த நந்தி சிலைக்கு மிக அருகில் கௌரி சங்கர்-பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கோயில் இருந்தது என்றும், அக்கோயிலைச் சுற்று ஒன்றிரண்டு மிகசிறிய கோயில்கள் இருந்ததாகவும், ஞானக் கிணறு அருகே ஒரு பிள்ளையார் சிலை இருந்ததாகவும் கிரீவ்ஸ் கூறுகிறார்.[16]

முஸ்லீம்கள் வழிபாடு

ஆதி விஸ்வநாதர் கோயிலின் சிதிலங்கள் கொண்ட ஞான வாபி பள்ளிவாசல் குறித்து எம். ஏ. செர்ரிங் (1868) என்பவர் விளக்குகையில்; பள்ளிவாசல் தூண்களில் இந்துக் கோயில் கட்டிடக்கலை நயத்தில் அமைந்த சிற்பங்கள் இருந்ததாகவும்; மேலும் அழுக்கு படிந்த பள்ளிவாசல் சுவர்கள் வண்ணநிறமிகள் கொண்ட சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது என்றும்; மேலும் இந்துக்கள் சுய விருப்பமின்றி முஸ்லிம்களை மசூதியைத் தக்கவைக்க அனுமதித்தனர், ஆனால் ஞானக் கிணறு முற்றத்தையும் சுவரையும் உரிமை கோரினர். முஸ்லிம்கள் பக்க நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் இந்துக்கள் முற்றத்தின் வழியாக முன் நுழைவாயிலைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். [16]

புதிய கோயில் கட்டுமான வரலாறு

பொ.ஊ. 1698-இல் ஜெய்பூர் இராச்சியத்தை ஆண்ட மன்னர் பிசன் சிங், முகலாயர்களால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை மீண்டும் கட்ட, அரசியல் ராஜதந்திரிகள் மூலம் முகலாயர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் ஞானக் கிணற்றைச் சுற்றியுள்ள தனியார் இடங்களை விலைக்கு வாங்கி கோயில் கட்டுவதற்கான பரப்பை பெரிதாக்கினார். ஆனால் அவரால் புதிய காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்ப இயலவில்லை.[21]

1742-இல் மராத்தியப் பேரரசிற்குட்பட்ட இந்தூர் இராச்சிய மன்னர் மல்கர் ராவ் ஓல்கர் ஞான வாபி பள்ளிவாசலை இடிக்க திட்டமிட்டார். அயோத்தி நவாப்பின் கீழ் வாரணாசி பகுதி இருந்ததால், பள்ளிவாசலை இடிக்கும் திட்டம் கைவிடப்பட்டது.[22] பின்னர் அவரது விதவை மருமகள் அகில்யாபாய் ஓல்கர், 1781-இல், ஞான வாபி பள்ளிவாசலை சுவரை ஒட்டி, ஞான வாபி முற்றப் பகுதியில் தற்போது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்.[23]

1990-இல் விசுவ இந்து பரிசத் அமைப்பினர், புதிய விஸ்வநாதர் கோயிலை கட்டுவதற்காக, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்ட பழைய விஸ்வநாதர் கோயில் இடத்தில் புதிதாக கட்டப்பட்ட ஞான வாபி பள்ளிவாசல் இடத்தை தங்களிடம் ஒப்படைக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 1992-இல் பாபர் மசூதி இடிப்புபிற்கு பிறகு ஞான வாபி பள்ளிவாசலுக்கு பலத்த காவல் போடப்ப்பட்டது. [24] ஆனால் விசுவ இந்து பரிசத் அமைப்பினரின் கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சி ஏற்கவில்லை.[25]

தற்போது ஞான வாபி பள்ளிவாசல் காவல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.[26]ஞான வாபி பள்ளிவாசலுக்கு செல்பவர்கள், பள்ளிவாசலுக்குள் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.[27]

Remove ads

கட்டிடக் கலை

ஞான வாபி பள்ளிவாசலின் முகப்பு மற்று நுழைவாயில் ஏறக்குறைய தாஜ் மகால் போன்று உள்ளது.[2] இடிக்கப்பட்ட பழைய காசி விஸ்வநாதர் கோயிலின் எச்சங்கள், அஸ்திவாரம், தூண்களின் நெடுவரிசைகள் மசூதியின் பின்புறப் பகுதியில் காணப்படுகிறது.[28]

அகழாய்வு குறித்து நீதிமன்றத் தீர்ப்பு

ஞான வாபி பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் கோயில் இடத்தின் ஆக்கிரமித்து கட்டியது குறித்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 8 ஏப்ரல் 2021 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞான வாபி பள்ளிவாசல் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் வளாகங்களில், ஐந்து நிபுணர்கள் கொண்ட குழு மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு உத்தரவு இட்டுள்ளது.[29][30][31].

சன்னி வக்ப் வாரியத் தலைவர் சுபிகர் அகமது பரூக்கி, மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார்.[32][33]

ஏப்ரல் 8, 2021 அன்று, ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் வீடியோ எடுத்து தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. [34][35]

  • ஏப்ரல் 14 மற்றும் 15 மே 2022 அன்று (சனி மற்றும் ஞாயிறு) ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் வீடியோ மூலம் தொல்லியல் களப் பணி மேற்கொள்ளப்பட்டது. [36][37]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads