தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் (Tamil Film Producers Council) என்பது சென்னையில் அமைந்துள்ள ஒரு சங்கமாகும். இது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்க அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கமாகும். 1998 சூலை 18 அன்று உருவாக்கப்பட்ட இந்த சங்கமானது, நலிந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு அறக்கட்டளையைக் கொண்டுள்ளது. இந்த சங்கமானது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளுக்கு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்ததும் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவனர் ...

1500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஏப்ரலில் நடந்த தேர்தலில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] 2008 திசம்பர் அன்று, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய துணைத் தலைவராக ஆர். பார்த்திபன் நியமிக்கப்பட்டார்.[6]

Remove ads

வரலாறு

2017 - தற்போதுவரை

சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 2017 ஏப்ரல் 2 அன்று அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதியான எஸ். இராஜேஸ்வரனால் நடத்தப்பட்டது.[7][8] தேர்தலில் போட்டியிட, விஷால் " நம்ம அணி " என்ற புதிய அணியை உருவாக்கினார். நம் அணியின் நிர்வாகிகளாக விஷால், கே. இ. ஞானவேல் ராஜா, எஸ். ஆர். பிரபு, கௌதம் மேனன், மிஷ்கின், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இருந்தனர்.[9] நம்ம அணியில் போட்டியிட்ட நிர்வாகிகளின் முக்கியமான நோக்கமாக தற்போதைய வணிக மாதிரியை மேம்படுத்துவதை திட்டமாக கொண்டதாக உருவாக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அந்த அணி வெற்றி பெற்றது.[10][11] இந்த அணி வெற்றி பெற்றதும் இளையராஜாவைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட ஏற்பாடு செய்ய திட்டமிட்டது.[12][13]

திரைப்படத் துறையில் நிலவும் திருட்டு குறுவட்டு, திரைப்படங்களை இணையதளங்களில் அனுமதியின்றி வெளியிடுதல் போன்றவற்றில் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 2017 ஏப்ரலில், விஷால் மற்றும் அவரது குழுவினர் கோரினர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 2017 மே 30 முதல் திரைப்படப் படப்பிடிப்புகள் காலவரையின்றி நிறுத்தப்படும் என்று அறிவித்தனர்.[14] திரையரங்க உரிமையாளர் சங்கமும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்தது.[15] பின்னர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.[16] ஒன்றிய அரசினால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசின் கேளிக்கை வரி தெளிவுபடுத்தப்படாததை எதிர்த்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், 2017 சூலை 3 முதல் திரையரங்குகளை மூடுவதாக அறிவித்துள்ளது.[17][18][19] தயாரிப்பாளர் சங்கம் அந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசு விரைவில் தீர்வை குறித்து முடிவு செய்ய வலியுறுத்தியது.[20] மேலும், அதிக பொருட் செலவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட ஏதுவாக பிராந்திய திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைந்த பட்ச ஜிஎஸ்டி வரி அடுக்குக்கு மாற்றுமாறு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டது.[21] அரசு இதில் எந்த முடிவும் எடுக்காததால், திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை 2017 சூலை 5 வரை நீட்டித்தனர்.[22] பின்னர் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது மேலும் 2017 சூலை 7 வெள்ளிக்கிழமை முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.[23][24][25][26] மாநிலத்தின் 30% கேளிக்கை வரி இருப்பதைப் பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்தது. வேலைநிறுத்தத்தினால் ஒரு நாள் வணிக இழப்பு சுமார் ₹ 20 கோடிகள் என்று சங்கத்தின் அறிக்கை தெரிவித்தது.

தயாரிப்பாளர் சங்கமானது இனி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் (பெப்சி) இணைந்து செயல்படுவதில்லை என்று 2017 சூலையில் அறிவித்தது. மேலும் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் இனி படப்பிடிப்புகள் நடத்துவோம் என்றும் அறிவித்தது.[27][28]

2014 - 2017

சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர்களாக எஸ். கதிரேசன், பி. எல். தேனப்பன், பொது செயலர்களாக டி. சிவா, ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளராக டி. ஜி. தியாகராஜன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.[29]

2019

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழ்நாடு அரசு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.[30]

2023

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பாக தேனாண்டாள் முரளி தலைவராகவும், ஜி. கே. எம். தமிழ் குமரன்யும் அர்ச்சனா கல்பாத்தியும் துணைத் தலைவராகவும், சந்திர பிரகாஷ் ஜெயின் பொருளாளராகவும், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் செயலாளராகவும் வெற்றி பெற்றனர்.[31]

Remove ads

இதையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads