தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம் (Tambaram Sanatorium railway station, நிலையக் குறியீடு:TBMS) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 32மீ (105 அடி) உயரத்தில் உள்ளது.இது சென்னை நகரத்தின் தெற்கே 27 கி.மீ தொலைவில் உள்ளது.
Remove ads
வரலாறு
இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]
1970 ஆம் ஆண்டு அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை விரிவடைந்து முக்கியத்துவம் பெற்றபோது, இந்த இரயில் நிலையம் உள்ளூர் மக்களுக்கு சேவை செய்ய கட்டப்பட்டது.[2]
Remove ads
பாதுகாப்பு
புறநகர் பகுதியான கிண்டி - செங்கல்பட்டு மார்க்கம் மிகப்பெரிய விபத்து மண்டலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தாம்பரம் - குரோம்பேட்டை வரையிலான இரயில்பாதையில், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 15 விபத்துக்கள் நிகழ்கிறது.
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads