தியோகர், உத்தரப் பிரதேசம்

From Wikipedia, the free encyclopedia

தியோகர், உத்தரப் பிரதேசம்
Remove ads

தியோகர் (Deogarh) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் லலித்பூர் மாவட்டத்தில் பேட்வா ஆற்றின் வலது கரையில் லலித்பூர் மலையின் மேற்கில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

விரைவான உண்மைகள் தியோகர், நாடு ...
Thumb
தியோகர் கோட்டை நுழைவு வாயில்

இங்குள்ள தியோகர் கோட்டையின் வெளிப்புறத்தில் குப்தர்கள் காலத்திய பொ.ச. 5ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னங்கள், இந்து மற்றும் சமணக் கோயில்கள் உள்ளது.[1][2][3]

குப்தப் பேரரசர்கள், தியோகரில் விஷ்ணுவிற்கு அர்பணித்த தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் முதலில் அறியப்பட்ட பஞ்சயாதனக் கோயிலாகும். இங்குள்ள தியோகர் கோட்டையில் கி பி 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டின் சாந்திநாதர் போன்ற சமண சமயக் கோயில்களில், சாந்திநாதர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் சன்னதிகளும், சிற்பங்களும் உள்ளது. தியோகர் கிராமத்தின் நினைவுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.[4]

Remove ads

பெயர்க் காரணம்

தியோகர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு தேவர்களின் கோட்டை அல்லது தேவர்களின் வீடு எனப் பொருளாகும்.[5]

அமைவிடம்

உத்தரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள தேவ்கர் கிராமம், லலித்பூர் நகரத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும், ஜான்சி நகரத்திலிருந்து 125 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[6][7]

மக்கள்தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தேவ்கர் கிராமத்தின் மக்கள் தொகை 783 என்பதாகும். இக்கிராமத்தின் மக்கள் தொகையில் புந்தேலி பழங்குடி மக்கள் தொகை 331 ஆக உள்ளது.

Thumb
தசவதாரக் கோயில் அல்லது விஷ்ணு கோயில் அல்லது தியோகர் குப்தர்களின் கோயில்
Thumb
தசவதாரக் கோயிலின் நுழைவு வாயில்
Thumb
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட பெருமாள் சிற்பம், 5-ஆம் நூற்றாண்டு[8]

நினைவுச் சின்னங்கள்

குப்தர்கள் காலத்தில் இந்துக் கோயில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை உச்ச கட்டத்தில் இருந்தது.[9] குப்த ஆட்சியாளர்கள் இந்துக்களாக இருப்பினும் பௌத்தம் மற்றும் சமண சமயப் பண்பாடுகளையும் ஆதரித்தனர்.

சாந்திநாதர் கோயில்

Thumb
பார்சுவநாதர் கோயிலில் பார்சுவநாதர் மற்றும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
Thumb
பார்சுவநாதர்

தியோகர் கிராமத்தின் கோட்டையில் கி பி எட்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட சாந்திநாதர் உள்ளிட்ட 31 சமணக் கோயில்களின் வளாகங்கள் உள்ளது.[5] இச்சமணக் கோயில் வளாகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[10][11]

Thumb Thumb
இடது: தசவதாரக் கோயிலின் கிழக்குச் சுவரில் நர-நாராயணர்களின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சம் சிற்பம்
Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads