திரைலோக்கியவர்மன்

சந்தேல மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திரைலோக்கியவர்மன் (Trailokyavarman)(பொ.ச.1203–1245) என்பவர் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார்.

விரைவான உண்மைகள் திரைலோக்கியவர்மன், செகசபுக்தி பிராந்தியத்தின் மன்னன் ...
Remove ads

வரலாறு

சந்தேலக் கல்வெட்டுகள், பரமார்த்திப் பிறகு திரைலோக்யவர்மன் சந்தேல அரியணையில் ஏறினார் என்று கூறுகின்றன. இவர் அநேகமாக பரமார்த்தியின் மகனாக இருக்கலாம். இருப்பினும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இதை உறுதியாகக் கூற முடியாது. [1]

திரைலோக்யவர்மனின் ஏழு கல்வெட்டுகள் அஜய்கர், பன்பூர், சத்தர்பூருக்கு அருகிலுள்ள கர்ரா மற்றும் தெஹ்ரி ( திகம்கர் ) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பல இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. [2] கல்வெட்டுகள் இவருக்கு வழக்கமான ஏகாதிபத்திய பட்டங்களை பரம-பட்டாரக மகாராஜாதிராஜா பரமேசுவர பரம-மகேசுவர சிறீ-கலஞ்சராதிபதி என்ற பட்டத்தை வழங்குகின்றன. [3] இவரது நாணயங்கள் பாந்தா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சந்தேல ஆதிக்கங்களின் பெரும்பகுதியை இவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை இது குறிக்கிறது. [2]

திரைலோக்யவர்மன் கலஞ்சராதிபதி ("கலஞ்சராவின் ஆண்டவர்") என்ற பட்டத்தை கொண்டிருந்தார். இது தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளர்களிடமிருந்து கலிஞ்சர் கோட்டையை இவர் மீட்டதாகக் அறிய முட்கிறது. இவரது காலத்திய கர்ரா செப்புத் தகடும் இவரது வாரிசான வீரவர்மனின் அஜய்கர் கல்வெட்டும் இந்தக் கருதுகோளை ஆதரிக்கின்றன. துருக்கியர்களுடனான போரில் கொல்லப்பட்ட இரவுதா பாபேயின் மகனுக்கு ஒரு கிராமத்தை வழங்கியதை கர்ரா கல்வெட்டு பதிவு செய்கிறது. [4] அஜய்கர் கல்வெட்டு, இவர் விஷ்ணுவைப் போலவே, துருக்கர்களால் உருவாக்கப்பட்ட கடலில் மூழ்கியிருந்த பூமியைத் தூக்கியதாகக் கூறுகிறது. [5]

பொ.ச.1233இல் சம்சுத்தீன் இல்த்துத்மிசின் அதிகாரி மாலிக் நுசரத்-உத்-தின் தைசி (அல்லது தயாசி) மூலம் முற்றுகையிடப்படுவதற்கு முன்பு, தில்லி சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கலிஞ்சர் நழுவிவிட்டதாக முஸ்லிம் சரித்திரமான தபகத்-இ- நசிரி தெரிவிக்கிறது. உரையின்படி, தைசி குவாலியரில் இருந்து கலிஞ்சருக்கு அணிவகுத்துச் சென்றார். கலிஞ்சரின் ஆட்சியாளரை தப்பி ஓடுமாறு செய்து பின்னர் நகரத்தை கொள்ளையடித்தார். [6] [7]

Remove ads

வெற்றிகள்

போஜவர்மனின் ஆட்சியின் அஜய்கர் பாறைக் கல்வெட்டின் படி, திரைலோக்யவர்மனின் தளபதி ஆனந்தன் பில்கள், சபரர்கள், புலிந்தர்கள் உட்பட பல பழங்குடியினரை அடிபணியச் செய்ததாகக் கூறுகிறது. அடையாளம் தெரியாத போஜுகா என்பவரை இவர் தோற்கடித்ததாகவும் கூறப்படுகிறது. [8]

சில முந்தைய அறிஞர்கள் திரைலோக்யவர்மன் கலாச்சூரி இராச்சியத்தின் வடக்குப் பகுதியையும் கன்யாகுப்ஜாவையும்(கன்னோசி) கைப்பற்றியதாக நம்பினர். இந்த கோட்பாடு பொ.ச.1212 தேதியிட்ட துரேதி கல்வெட்டில் திரைலோக்யவர்மனுடன் குறிப்பிடப்பட்டுள்ள "திரைலோக்யமல்லன்" அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், பொ.ச.1197 தேதியிட்ட ஜுல்பூர் கல்வெட்டின் கண்டுபிடிப்பு இந்த திரைலோக்யமல்லன் உண்மையில் காலச்சூரி மன்னர் விஜயசிம்ம்மனின் மகன் என்கிறது. [9]

Remove ads

நாணயங்கள்

இவரது முன்னோடிகளைப் போலவே, திரைலோக்யவர்மனும் தெய்வம் அமர்ந்திருக்கும் நிலையில் தங்க நாணயங்களை வெளியிட்டார். [10] செப்புக் காசுகளில் அனுமன் உருவம் இடம் பெற்றுள்ளது. [10] இவருக்குப் பின் வீரவர்மன் ஆட்சிக்கு வந்தார் . [11]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads