துரைராசா ரவிகரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துரைராசா ரவிகரன் (Thurairasa Ravikaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
இரவிகரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,868 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 14 இல் கொழும்பில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[4] இவர் வட மாகாண சபையில் மீன்பிடி, போக்குவரத்து, வணிக, மற்றும் ஊராட்சி அமைச்சருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[5]
2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.[6]
Remove ads
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads