1வது வட மாகாண சபை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1வது வட மாகாண சபை (1st Northern Provincial Council) என்பது 2013 செப்தெம்பர் 21 இல் நடைபெற்ற 2013 மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மாகாண சபையின் அமர்வுகளைப் பற்றியது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி, மாகாணசபை ஒன்றின் ஆட்சிக் காலம் அதன் முதலாவது அமர்வு இடம்பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டு காலம் ஆகும். இச்சபையின் முதலாவது அமர்வு 2013 அக்டோபர் 25 ஆம் நாள் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள புதிய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது.[1] சி. வி. கே. சிவஞானம், அன்ரன் ஜெயநாதன் ஆகியோர் சபைத் தலைவராகவும், பிரதித் தலைவராகவும் போட்டியின்றி முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2][3][4]
Remove ads
தேர்தல்
1வது வட மாகாணசபைத் தேர்தல் 2013 செப்தெம்பர் 2013 இல் நடைபெற்றது. பொதுவாக இலங்கைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணம், வன்னி என இரண்டு தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை முதற்தடவையாக வட மாகாணத்தின் ஐந்து நிருவாக மாவட்டங்களும் ஐந்து தேர்தல் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் இடம்பெற்றன. தேசிய மட்டத்தில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இலங்கைத் தமிழர்களை முக்கியமாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைப்பில் தேர்தலில் நின்றது. மொத்தமுள்ள 36 இடங்களில் ததேகூ 28 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[5] ஐமசுகூ 7 இடங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஒரு இடத்தையும் கைப்பற்றின.[5] ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன.
முடிவுகள்
Remove ads
அரசு/அமைச்சர்கள்
1வது வட மாகாண சபையின் அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு:
- சபையின் தலைவர் (தவிசாளர்): சி. வி. கே. சிவஞானம்; (இ.த.அ.க, யாழ்ப்பாணம்)
- சபையின் பிரதித் தலைவர்: அன்ரன் ஜெயநாதன், (இ.த.அ.க, முல்லைத்தீவு)
அமைச்சரவை
வட மாகாண சபையின் அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட ஆகக்கூடியது ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். வட மாகாண சபைக்கு 2013 இல் நடைபெற்ற தேர்தல் வரையில் அமைச்சரவை இருக்கவில்லை.
முதலமைச்சர்
முதலாவது வட மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் 2013 செப்தெம்பர் 23 இல் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.[8] விக்னேசுவரன் 2013 அக்டோபர் 1 இல் ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியிடம் இருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.[9][10][11] இவர் பின்னர் 2013 அக்டோபர் 7 இல் முதலமைச்சராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14]
அமைச்சர்கள்
1வது அமைச்சரவைக்கு 2013 அக்டோபர் 10 ஆம் நாள் பின்வரும் நான்கு அமைச்சர்கள் முதலமைச்சரினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்டோபர் 11 இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[15][16]
- வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்: பொ. ஐங்கரநேசன் ஈபிஆர்எல்எஃப், யாழ்ப்பாணம்)
- கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சர்: த. குருகுலராஜா (இ.த.அ.க, கிளிநொச்சி)
- சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்: மரு. ப. சத்தியலிங்கம் (இ.த.அ.க, வவுனியா)
- மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்: பா. டெனீஸ்வரன் (ரெலோ, மன்னார்)
இவற்றை விட வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும்.[17]
Remove ads
உறுப்பினர்கள்
யாழ்ப்பாண மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
வவுனியா மாவட்டம்
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் விபரங்கள்:[24]
மேலதிக உறுப்பினர்கள்
தேர்தலில் ஆகக் கூடுதலான இடங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேலதிக 2 இடங்கள் கிடைத்தன. இந்த இரண்டு இடங்ளில் ஒன்று ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கும், மற்றையது பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் ஒருவருக்கு அளிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.[25]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads