தென்பெண்ணை ஆறு
தமிழகத்தில் ஓடும் ஓர் ஆறு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்பெண்ணை ஆறு (South Pennar) தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கருநாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கி.மீ. தூரம் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]

தென்பெண்ணை ஆறு, கருநாடகா மாநிலத்தில் 112 கி.மீ. நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ. நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கி.மீ. நீளத்திற்கும், விழுப்புரம் ,திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ. நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 14,449 சதுர கி.மீ.2 ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு முதலியன இதன் முக்கியத் துணையாறுகளாகும்.[2]
Remove ads
நீர்த்தேக்க கட்டமைவுகள்
ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருட்டிணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை ஆகியவை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள் ஆகும்.
ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள்
காவேரிப்பட்டிணம்,மஞ்சமேடு, இருமத்தூர், ஈச்சம்பாடி, அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம், அனுமந்தீர்த்தம், நீப்பத்துறை, மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை,திருக்கோவிலூர், மரகதபுரம், பேரங்கியூர், தளவானூர்,கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், சொர்ணாவூர்,மேல்பட்டாம்பாக்கம் மற்றும் கடலூர் ஆகும். 11°46′N 79°47′E
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads