தேவா வம்சம் (சாகேதம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேவா வம்சத்தினர் சாகேதம் என்று அழைக்கப்பட்ட அயோத்தி நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கோசல நாட்டை கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிமு முதலாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.[1][2]
தேவா வம்சத்தினரின் தலைநகரான சாகேதம் எனும் நவீன அயோத்தியின் அமைவிடம்

தேவா வம்ச ஆட்சியாளர்கள்

- மூலதேவன் - சுங்கர் வம்ச பேரரசன் புஷ்யமித்திர சுங்கருக்கு அடங்கிய சிற்றரசன்
- மித்தரதேவன் (சுங்கர் வம்ச பேரர்சர் வசுமித்திரனின் சமகாலத்தவர்)
- வாயுதேவன்
- பாததேவன்
- பல்குதேவன்
- தனதேவன்
- விசாகதேவன்
அரசியல் வரலாறு
அயோத்தி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் மூலம் தேவா வம்ச மன்னர்களான மூலதேவன், வாயுதேவன், விசாகதேவன், பாததேவன் மற்றும் தனதேவன் குறித்து அறிய முடிகிறது.[3][4][5] தனதேவன் நிறுவிய அயோத்தி கல்வெட்டு மூலம் தனதேவனின் தந்தை மன்னர் பல்குதேவனை அறிய முடிகிறது. [3] மௌரியப் பேரரசுக்கு பின் வந்த சுங்கர் வம்ச காலத்தில், தேவா வம்ச மன்னர்கள் சிற்றரசர்களாக சாகேதம் எனும் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிமு முதலாம் நூற்றாண்டு முடிய ஆட்சி செய்தனர்.
யுக புராணம் தேவா வம்சத்தின் தலைநகரான சாகேதம் எனும் அயோத்தி நகரத்தை கிரேக்கர்கள், மதுரா மற்றும் பாஞ்சாலரின் கூட்டுப் படையால் தாக்கப்பட்டதாக விவரிக்கிறது.[6]. பாணினி மீதான பதஞ்சலியின் விளக்க உரையில் யவனர்கள் எனும் கிரேக்கர்கள் அயோத்தியை முற்றுகையிட்ட செய்தியை விளக்குகிறது.
கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவில் தத்தா வம்சத்தினர் தேவா வம்சத்தினரை முறியடித்து அயோத்தியை ஆண்டனர். பின்னர் மதுரா நாட்டின் மித்திரா வம்சத்தினர் தத்தா வம்சத்தினரை வென்று அயோத்தியைக் கைப்பற்றினர்[1]கிபி 30ல் குசானப் பேரரசு நிறுவப்படும் வரை, இந்தோ சிதியர்கள் வடக்கு மற்றும் வடமேற்கில் இருந்த சிற்றரசர்களை வென்றனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads