நடுவட்டம்

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மனித குடியேற்றம் From Wikipedia, the free encyclopedia

நடுவட்டம்map
Remove ads

நடுவட்டம் (ஆங்கிலம்:Naduvattam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

நடுவட்டம் பேரூராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது உதகமண்டலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், உதகமண்டலத்திலிருந்து 35 கி.மீ.; கூடலூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

61.70 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2340 வீடுகளும், 8505 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.48°N 76.57°E / 11.48; 76.57 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953 மீட்டர் (6407 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads