நாதம்பாளையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாதம்பாளையம் என்ற எம். நாதம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த 'நடுகல்' ஒன்று நாதம்பாளையம் பகுதியில் கிடைக்கப் பெற்றதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.[3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 344.44 மீ. உயரத்தில், (11.1797°N 77.3711°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாதம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்கள்
கரியபெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற மாரியம்மன் கோயில்[4] என்ற அம்மன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் நாதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளன.
அரசியல்
நாதம்பாளையம் பகுதியானது, அவினாசி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, நீலகிரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads