நிகிலா விமல்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகிலா விமல் (Nikhila Vimal) ஓர் இந்திய நடிகையாவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் முக்கியமாக பணியாற்றுகிறார். கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவணப்படத்துடன் தொலைக்காட்சியில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1][2][3]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
நிகிலா விமல் பவித்ரன் -கலாமண்டலம் விமலாதேவி ஆகியோருக்கு மகளாக கேரளாவின் தளிப்பரம்பாவில் பிறந்தார்.[4] இவரது தந்தை புள்ளிவிவரத் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் ஒரு நடனக் கலைஞராவார். இவரது மூத்த சகோதரி அகிலா விமல் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளில் ஆராய்ச்சி அறிஞர் ஆவார். நிகிலா விமல் பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரள நடனம், தனி நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். மேலும் இவர் இளைஞர் விழாக்களில் தனது இருப்பைக் காட்டினார்.[5] தளிபரம்பாவின் சர் சையத் கல்லூரியில் 2016 இல் தனது இளங்கலை அறிவியல் (தாவரவியல்) பட்டத்தைப் பெற்றார் .[6]
Remove ads
திரை வாழ்க்கை
2009ஆம் ஆண்டில் பாக்யதேவதா (2009) என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[1][2][3]வெற்றிவேல் (2016) என்ற படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.[7][8] பின்னர், கிடாரி (2016),[9] அரவிந்தண்டே அதிதிகல் (2018), நான் பிரகாசன் (2018),[10] மேரா நாம் ஷாஜி (2019), ஒரு யாமண்டன் பிரேமகதா (2019), தம்பி (2019), அஞ்சாம் பத்திரா (2020), பூசாரி (2021) போன்ற படங்களிலும் நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads