ப. சத்தியலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மநாதன் சத்தியலிங்கம் (Pathmanathan Sathiyalingam) இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
சத்தியலிங்கம் வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் எஸ். பத்மநாதனின் மகன் ஆவார்.[1] மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். சட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளிலும், திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுச் செயல்பாடுகளிலும் வங்காள தேசம், பிலிப்பைன்சு, சப்பான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார்.[2][3][4]
Remove ads
அரசுப் பணி
சத்தியலிங்கம் வவுனியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி, பிராந்திய வைத்திய அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளைத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[5][6]
அரசியலில்
சத்தியலிங்கம் 2013 வட மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 19,656 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[7][8]
இவர் வட மாகாண சபையின் சுகாதார சேவை, சுதேச மருத்துவ அமைச்சராக முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டு[9][10] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[11][12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads