பகவந்த் மான்

இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் From Wikipedia, the free encyclopedia

பகவந்த் மான்
Remove ads

பகவந்த் மான் (Bhagwant Singh Mann ) (பிறப்பு: 17 அக்டோபர் 1973) இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், நகைச்சுவையாளரும், பாடகரும், முன்னாள் நடிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.[2]இவர் 10 மே 2017 அன்று சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் பகவந்த் மான், 17வது பஞ்சாப் முதலமைச்சர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

2011-ஆம் ஆண்டில் பகவந்த் மான் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார்.[3][4]2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லெகரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மார்ச் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[5]2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். [6] இவர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது போதை மது சர்ச்ச்சையில் சிக்கினார்.[7] [8]

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.

Remove ads

பஞ்சாப் முதலமைச்சர் பதவி

சனவரி 18, 2022 அன்று, பகவந்த் மான், 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சருக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் 93% வாக்காளர்கள் பகவந்த் மான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறினர். இவரது தலைமையின் கீழ் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் 117 இடங்களில் 92 இடங்களை வென்றது.[9] பஞ்சாபின் முதல் அமைச்சராகப் பகவந் மான் பதவியேற்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.[10][11]

இவர் 16 மார்ச் 2022 அன்று, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சராக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[12][13]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads