பசுமைக்குடில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசுமைக்குடில் (greenhouse) (அல்லது கண்ணாடிக்குடில்,அல்லது போதுமான வெப்பம் உள்ளபோது வெங்குடில்) என்பது ஒளிபுகும் சுவர்களும் கூரையும் கண்ணாடியால் அமைந்த கட்டிடமாகும். இங்கு, கட்டுபடுத்திய காலநிலை சூழலில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.[1] இவை அளவில் சிறு கொட்டகை முதல் தொழிலக் கட்டிடம் வரையிலான கட்டமைப்புகளாக அமைகின்றன. மிகச் சிறிய பசுமைக்குடில் தண்சட்டகம் எனப்படுகிறது. பசுமைக்குடில் உட்பகுதி சூரிய ஒளிக்கு ஆட்படுவதால் வெளிச்சூழலை விட கணிசமாக சூடடைகிறது. எனவே குளிர்ந்த வானிலையில் இருந்து உள்ளளடக்கத்தைக் காப்பாற்றுகிறது.


பல வணிகமுறை கண்ணாடி பசுமைக்குடில்கள் அல்லது வெங்குடில்கள் காய்கறிகளும் பூக்களும் விளைவிக்கும் உயர்தொழில்நுட்ப ஏந்துகளாகும். கண்ணாடி பசுமைக்குடில்களில் திரையிடும் அமைப்புகள், சூடாக்கும், குளிர்த்தும், ஒளியூட்டும் அமைப்புகள், உள்நிலைமைகளைக் கட்டுபடுத்த ஒரு கணினி அமைந்து உகந்த பயிர்வளர்ச்சிச் சூழலை உருவாக்குகின்றன. பசுமைக்குடில் நுண்காலநிலையைக் (அதாவது, காற்று வெப்பநிலை, சார்பு ஈரப்பதன், ஆவியழுத்தக் குறைபாடு ஆகியவற்றைக்) கட்டுபடுத்தி, அதன் உகப்புநிலையையும் ஏற்ற ஏந்து விகிதத்தையும் மதிப்பிட பல்வேறு நுட்பங்கள் பயன்கொள்ளப்படுகின்றன . இதனால் விளைச்சலுக்கான இடர் குறிப்பிட்ட பயிரின் விளைச்சலுக்கு முன்பே கட்டுபடுத்த முடிகிறது.
சுவர்கள், கூரைகள் ஒளிபுகவிடும் தன்மை கொண்ட கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு பசுமைக்குடில்கள் அமைக்கப்படுவதனால், தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியை வழங்கவும், கட்டட அமைப்பின் தன்மையால் தாவரத்திற்குச் சாதகமான ஈரப்பதனை வழங்கக் கூடியதாகவும் இவை அமைக்கப்படுகின்றன. கண்ணாடி அல்லது நெகிழியினால் மூடப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுவதனால், உள்ளே இருந்து வெப்பம் வெளியேறாது தவிர்க்கப்பட்டு, குளிரான வெளிச்சூழல் இருக்கையில் தாவரங்கள் உள்ளாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் முக்கியமாக சூழலினால் இலகுவில் பாதிப்படையக் கூடிய இளம்தாவரங்களான நாற்றுக்களைப் பாதுகாக்கவும், சாதகமற்ற பருவகாலங்களிலும் தாவர உற்பத்தி, விருத்தியைச் செய்யவும் இந்த பசுமைக்குடில்கள் உதவுகின்றன. அத்துடன் பலத்த காற்று போன்ற பாதகமான சூழல்களைத் தவிர்க்கவும் உதவுகின்றன.[2][3].
பசுமைக்குடிலை மூடியுள்ள ஒளிபுகவிடும் தன்மை கொண்ட பொருட்களினூடாக கண்ணுக்குப் புலப்படும் சூரியக் கதிர்வீச்சு உள்ளே வரும்போது, அங்கிருக்கும் தாவரங்கள், மண் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களாலும் உறிஞ்சப்பட்டு, வெப்ப ஆற்றலாக மாறும். அவ்வாறு வெப்பமான பொருட்களால் அவற்றைச் சுற்றியுள்ள காற்றும் வெப்பமடையும். அந்த வெப்பம் வெளியேறாது அதனை மூடியுள்ள சுவர், கூரை பாதுகாக்கும். அத்துடன், வெப்பமடைந்த தாவரம், மற்றும் ஏனைய பொருட்களிலிருந்து ஒரு பகுதி வெப்ப ஆற்றலானது, அதிர்வெண் கூடிய அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றை கொண்ட வெப்பக் கதிர்வீச்சாக வெளியேறும். மூடப்பட்ட அமைப்பினுள் இருப்பதனால், அவ்வாறு வெளியேறும் ஆற்றலின் ஒரு பகுதியும் சுற்றியுள்ள காற்றில் பிடிக்கப்படும். சுற்றியுள்ள காற்றில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் பெறப்படும் காபனீரொக்சைட்டு அதிகளவில் இருக்கும். இந்த வளிமம் அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றையை உறிஞ்சி, பல திசைகளிலும் வெளிவிடும் ஆற்றல் கொண்டதாக இருப்பதனால் இது பைங்குடில் வளிமங்களில் ஒன்றாக இருக்கின்றது[4][5][6]. இது போன்ற ஒரு செயற்பாடு, பூமியைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்திலும் நிகழ்ந்து வெப்பம் அதிகரித்தலையே பைங்குடில் விளைவு என்கின்றோம்.
இவை வேறுபட்ட அளவுகளில் அமைக்கப்படுகின்றன. சிறிய குடிசைகளாகவோ, அல்லது வணிக நோக்கில் மிகப்பெரிய அளவிலான கட்டடங்களாகவோ, அல்லது வீட்டினுள்ளேயே தனிப்பட்டவர்கள் தமது தேவைக்காக அமைக்கும் மிகச் சிறிய பெட்டிகள் வடிவிலானவையாகவோ இருக்கலாம். மிகச் சிறியவற்றை en:Cold Frame என அழைக்கப்படும்.
Remove ads
வரலாறு



சுற்றுச்சுழல் காப்புடைய தாவர வளர்ப்பு உரோம ஆட்சிக் காலத்திலேயே நிலவியுள்ளது. உரோம நாட்டின் பேரரசர் திபேரியசு இவ்வகை ஆர்மேனிய வெள்ளரிகளைச் சாப்பிட்டுள்ளார்.[7] vegetable daily. உரோம நாட்டுத் தோட்டக்கலைஞர்கள் பசுமைக்குடிலைப் போன்ற செயற்கை முறைகளை பயன்படுத்தி தாவரங்களை வளர்த்து ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவரது உணவு மேசைக்கு வழங்கியுள்ளனர். வெள்ளரிச் செடிகளை சக்கர வண்டியில் நட்டு நாள்தோறும் வெய்யிலில் வைத்துச் சூடாக்கியுள்ளனர். அதை இரவில் வீட்டுக்குள் கொண்டு சென்று வெதுவெதுப்பாக காப்பாற்ரியுள்ளனர். வெள்ளரிகளை வெள்ளரி இல்லங்களில் அமைந்த சட்டகங்களில் தேக்கிவைத்துள்ளனர். இவை எண்ணெய்த் துணியாலோசெலினைட் கனிமத் தகடுகளாலோ ஒட்டிவைத்துள்லனர் என பிளினி முதுவல் விவரிக்கிறார்.[8][9]
முதல் வெங்குடில் விவரிப்பு 1450 களில் கொரியாவின் யோசியான் அரசவை மருத்துவர் தொகுத்த சங்கா யோரோக் எனும் கால்நடை வளர்ப்புக்கான தொகு நூலில் உள்ளது. இந்த விவரிப்பு அந்நூலில் உள்ள மழக்காலத்தில் காய்கறி பயிரிடல் குறித்த இயலில் வருகிறது. இந்நுல் காய்கறிகளைப் பயிரிடுவதற்கான பசுமைக்குடிலை கட்டியமைப்பத்ற்கான விரிவான அறிவுரைகளைத் தருகிறது. சூடாக்கிய சூழலில்கட்டாய முறையில் பூக்கவைத்தல், பழங்களைப் பழுக்கவைத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. இதற்கு, வெப்பத்தையும் ஈரப்பதனையும் கட்டுபடுத்த, கொரியாவின் மரபான தரை சூடேற்றும் ஓண்டோல் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது; வெப்பக் காப்பீட்டுச் சுவர்களும் பயனில் இருந்துள்ளன பகுதி ஒளிபுகும் அஞ்சி எனும் கொரிய எண்ணெய்த்தாள்களால் மூடிய சாளரங்கள் பயனில் இருந்துள்ளன. இவை ஒளிபெற உதவி வெளிச் சூழலில் இருந்து தாவரங்களை க் காத்துள்ளன. யோசியான் பேரரசு ஆட்சியிதழ்கள் மந்தாரின் ஆரஞ்சு மரங்களுக்கு வெப்பம் ஊட்ட ஓண்டோல் தரைச் சூடேற்ரக் கருவியமைந்த பசுமைக்குடில் ஒத்த கட்டமைப்புகள் 1438 ஆண்டு மழைக்காலத்தில் உருவாக்கப்பட்டதை உறுதிபடுத்துகின்றன.[10]
பதினேழாம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் இங்கிலாந்திலும் தாவர வளர்ப்புக்கான பசுமைக்குடிகள் தோன்றலயின. முதல் முயற்சிகளில் கூரைக் கவிப்புக்காக ஏரளமன பணம் செல்விடப்பட்டுள்ளது. இந்தப் பசுமைக்குடிகளுக்குப் போதுமானதும் சமனிலையானதுமான வெப்பம் தருவதிலும் பல சிக்கல்கள் இருந்துள்ளன. முத்ல் அடுப்புவழி சூடேற்றிய ப்சுமக்குடில் ஐக்கிய இராச்சியத்தில் செல்சா தோட்டத்தில் 1681 இல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[11] இன்று, நெதர்லாந்தில் உலகத்திலேயே அதிகமான மாபெரும் பசுமைக்குடில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சில பல மில்லியன் டன் காய்கறிகளை ஒவ்வோராண்டும் விளைவிக்கின்றன.
பிரான்சு நாட்டுத் தாவரவியலாளராகிய சார்லசு உலூசியன் போனபார்ட் வெப்ப மண்டல மூலிகைத் தாவரங்களை வளர்க்க முத்லில் அறிவியல் முறையில் பசுமைக்குடிலை ஆலந்து இலெய்டனில் 1800 களில் கட்டியமைத்தவராகக் கருதப்ப்படுகிறார்.[12]
நீர்வழிதாரை அமைந்த பசுமைக்குடில்கள் 1980 களிலும் 1990 களிலும் பரவலாகின. இந்தப் பசுமைக்குடிலள் பொதுச் சுவராலோ தாங்கு கம்ப வரிசையாலோ ஏந்திய இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்டமைந்தன. த்ரைக்கும் வெளிச்சுவருக்கும் உள்ள விகிதத்தைக் கணிசமாக கூட்டி வெப்ப உள்ளீடு குறைக்கப்பட்டது. விளைச்சலுக்கும் விற்பனைக்குமான தாவரங்களுக்கு நீர்வழிதாரை அமைந்த பசுமைக்குடில்கள் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பாலிசார்பனேற்றுக் கவிப்பால் அல்லது காற்று இடையில் ஊட்டிய இரட்டையடுக்கு பாலிஎதிலீன் படலத்தால் வழக்கமாக மூடப்படுகின்றன.[சான்று தேவை]
Remove ads
படத்தொகுப்பு
- பேராதனை தாவரவியற் பூங்காவில் ஆர்க்கிட் தாவரங்களைக் கொண்ட பசுமைக்குடில்
- பேராதனை தாவரவியற் பூங்காவில் ஆர்க்கிட் தாவரங்களைக் கொண்ட பசுமைக்குடில்
மேற்கோள்கள்
நூல்தொகை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads