படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் (OFB), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும்.[9] படைக்கலத் தொழிற்சாலை வாரியத்தின் கீழ் இயங்கும் 41 ஆயுதத் தொழிற்சாலைகளில் 7 மட்டும் பொதுத்துறை நிறுவனங்களாக செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் உள்ளது.
இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் உலகின் 37வது பெரிய பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியாளர் ஆவார். ஆசியாவில் 2வது பெரிய படைக்கல உற்பத்தி நிறுவனம் ஆகும்.[10][11] மேலும் இது இந்தியாவின் மிகப் பழமையான அமைப்பாகும்.[12][13] இது மொத்தம் 80,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.</ref>[8] இதனை "இந்தியப் பாதுகாப்பின் நான்காவது ஆயுதம்" என்றும்[14][15][16] , இந்தியாவின் "ஆயுதப் படைகளுக்குப் பின்னால் உள்ள படை" என்றும் அழைக்கப்படுகிறது.[17][18] 2020-2021ஆம் ஆண்டில் இதன் மொத்த விற்பனை US$3 பில்லியன் (₹22,389.22 கோடி) ஆகும்.[2]
இது காற்று, நிலம் மற்றும் கடல் அமைப்புகளில் இயங்கும் போர்க் கருவிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி, சோதனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்தியப் படைக்கலத் தொழிற்சாலை வாரியம் நாடு முழுவதும் நாற்பத்தொரு ஆயுதத் தொழிற்சாலைகள், ஒன்பது பயிற்சி நிறுவனங்கள், மூன்று பிராந்திய சந்தைப்படுத்தல் மையங்கள் மற்றும் நான்கு பிராந்திய பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது.[19][20] ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 18 அன்று ஆயுதத் தொழிற்சாலை நாள் கொண்டாடப்படுகிறது.[21][22]
Remove ads
பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுதல்
1 அக்டோபர் 2021 அன்று இந்த வாரியம் கலைக்கப்பட்டு, அதன் 41 தொழிற்சாலைகள் 7 பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டது.[23][24][25] அவைகள் பின்வருமாறு:
- இயந்திரா இந்தியா, கான்பூர்
- ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட், ஆவடி
- இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், கான்பூர்
- முனிசன்ஸ் இந்தியா லிமிடெட், புனே
- ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், கான்பூர்
- கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட், கான்பூர்
- இந்தியா ஆப்டெல் லிமிடெட், தேராதூன்
படைக்கலன் தொழிற்சாலைகள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads