பண்ருட்டி (கடலூர்)

From Wikipedia, the free encyclopedia

பண்ருட்டி (கடலூர்)map
Remove ads

பண்ருட்டி (ஆங்கிலம்: Panruti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி பண்ருட்டி என்று பெயர் பெற்றது. பண்ருட்டி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இங்கு 150 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டப்பட்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில் வீரட்டானேசுவரர் கோயில் திருவதிகையில் உள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 60,323 பேர் இங்கு வாழ்கின்றனர்.[4] இவர்களில் 50% பேர் ஆண்களும், 50% பேர் பெண்களும் ஆவர். பண்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 62% ஆகவும் அமைகிறது. இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள்தொகையில் 6,257 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

தொழில்

பண்ருட்டி நகரத்தை ஒட்டி தென்புறத்தில் கெடிலம் ஆறு செல்கிறது. வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. கெடிலம் ஆற்றின் தென்புறம் செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பண்ருட்டி நகரத்திற்கு வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. பண்ருட்டி யின் வடக்கு பகுதியில் களிமண் பூமியாகும் இங்கு நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. அதிகமாக கொய்யா தோப்புகள் நிறைந்துள்ளன. பண்ருட்டி வட்டத்தின் தென் பகுதி முந்திரி,பலா விளைகிறது. வட பகுதியில் கொய்யா, சப்போட்டா பழ வகை பயிர் செய்யப்படுகிறது.

Thumb
பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.
Thumb
பண்ருட்டி பெரிய கோயிலின் இரவு தோற்றம்
Remove ads

முக்கிய பிரமுகர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads