பாங்கி கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாங்கி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Bangi Komuter Station; மலாய்: Stesen Komuter Bangi) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பாங்கி லாமா, நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். இந்த நிலையம் பாங்கி எனும் நகரத்தில் அமைந்துள்ளதால் அந்த நகரத்தின் பெயரில் அதற்கும் பெயரிடப்பட்டது.[1]
சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யபடுகிறது.[2]
Remove ads
பொது
இந்த நிலையத்தில் மூன்று தொடருந்து பாதைகள்; 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடைள் உள்ளன. பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[3][4]
நிலையத்தில் பயணச் சீட்டு வழங்கிடம் மற்றும் இரண்டு பயணச் சீட்டு விற்பனை இயந்திரங்களும் உள்ளன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.
பாங்கி நகரத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த நிலையம் நியாயமான எண்ணிக்கையிலான பயணிகளைப் பெறுகிறது. இந்த நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் பெரியதாகவும் வசதியாகவும் உள்ளது. நிலையத்திற்கு வெளியே சிறிய அங்காடிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பழங்கள், குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன.
Remove ads
மேலும் காண்க
பாங்கி நிலையக் காட்சியகம்
- நடைபாதை 02
- நுழைவாயில்
- நடைபாதை 02
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads