பாங்கிலி பிராந்தியம்
இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாங்கிலி பிராந்தியம் (ஆங்கிலம்: Bangli Regency; பாலினியம்: Kabupatén Bangli; இந்தோனேசியம்: Kabupaten Bangli) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் பாங்கிலி (Bangli). இதுவே பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும்,
1907-ஆம் ஆண்டு வரை, பாங்கிலி பிராந்தியம் பாலியின் ஒன்பது இராச்சியங்களில் ஒன்றாக இருந்தது.[2] பாங்கிலி பிராந்தியத்தின் தலைநகரமான பாங்கிலி நகரில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரா கெகான் எனும் புகழ்பெற்ற இந்து கோயில் உள்ளது.
புரா டாலெம் கலிரான் கோயில் (Pura Dalem Galiran), பாங்கிலி நகரில் இருந்து வடமேற்கே 1.4 கி.மீ தொலைவில் உள்ளது.[3] பாங்கிலி நகர மையத்திலிருந்து தெற்கே 1.3 கி.மீ தொலைவில் புரா டாலெம் பெனுங்கேக்கான் கோயில் (Pura Dalem Penunggekan) உள்ளது.[4] இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் நரகத்தில் உள்ள பாவிகளின் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காட்டப்படுகின்றன.
பண்டைய காலங்களில் இருந்து பாங்கிலி பிராந்தியம், பாலி தீவின் இராச்சியங்களில் ஒன்றாக, மிகப் பழைமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கு காரணம்; அதன் பாதுகாக்கப்பட்ட கோயில்கள் மற்றும் அதன் நிலப்பரப்பில் காணப்படும் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுகள் ஆகும்.[5]
Remove ads
வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தெற்கு மற்றும் கிழக்கு பாலியின் நீர்ப்பாசனத்திற்கான குறிப்பிடத்தக்க நீர் ஆதாரமான பத்தூர் ஏரியின் அமைவிடம் காரணமாக, பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அதன் விலைமதிப்பற்ற நீர் வழங்கல் முறை; பத்தூர் ஏரிப் பகுதியை மிகவும் விரும்பத்தக்க இடமாக மாற்றியது. அதுவே அண்டை ஆட்சியாளர்களிடையே கடுமையான மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[5]
பாங்கிலி பிராந்தியம், பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும். இதன் வடக்குப் பகுதியில் பத்தூர் மலை உள்ளது. உபுட் நகரத்தில் இருந்து கிந்தாமணி வழியாக வடக்கு கடற்கரைக்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அந்த பத்தூர் மலை உள்ளது.[6][7]
பாலினிய இகாகா ஆண்டு
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய இராச்சியமாக உருவெடுத்தது. இறுதியில் பாங்கிலி நகரம் ஒரு முக்கிய பாலினிய இராச்சியத்தின் தலைநகரமாக மாறியது. பாலினிய நாட்காட்டியில், இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் 1204-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதன் விளைவாக பாலினிய இகாகா ஆண்டு (Balinese Icaka year) உருவானது. அதுவே பாங்கிலி பிராந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அப்பகுதியில் அதிகாரம் மற்றும் நிர்வாக மையமாகவும் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.[5][8]
ஓர் இராச்சியத்தின் தலைநகராக பாங்கிலி முக்கியத்துவம் பெற்றது. கைவினைஞர்கள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்களை பாங்கிலி நகரம் ஈர்த்தது; அப்பகுதியின் செழிப்பான கலாசார மற்றும் கலைப் பாரம்பரியத்திற்குப் பங்களித்தனர். கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பிற கட்டிடக்கலை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் அந்தப் பழைய இராச்சியத்தின் செழிப்பையும்; ஆழமாக வேரூன்றிய ஆன்மீகத்தையும் பிரதிபலிக்கின்றன.[5][9]
Remove ads
நிர்வாக மாவட்டங்கள்
பாங்கிலி பிராந்தியம் 4 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
- சூசுட்
மாவட்டம் - பாங்கிலி மாவட்டம்
- தெம்புக்கு மாவட்டம்
- கிந்தாமணி மாவட்டம்
Remove ads
காலநிலை
பாங்கிலி பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.
Remove ads
காட்சியகம்
- பாங்கிலி பிராந்திய காட்சிப் படங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads