பாராபங்கி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாராபங்கி மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றூ. இது ஃபைசாபாத் கோட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பாராபங்கி ஆகும்.
இராமாயாணக் காலத்தில், இப்பகுதி சூரிய குல அரசர்களால் ஆளப்பட்டது என புராணங்கள் கூறுகின்றன. பின்னர், இசுலாமியர் ஆட்சிக்கும், பிரித்தானியர் ஆட்சிக்கும் உட்பட்டது. மக்கள் அவாதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தி மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று. வேளாண்மை முதன்மைத் தொழிலாக உள்ளது. கோதுமை, நெல், மக்காச்சோளம் ஆகியன அதிகம் விளைகின்றன. அபினி, மெந்தால், கரும்பு, மாம்பழம், வாழை, காளான், உருளைக் கிழங்கு, தக்காளி, மசாலாப் பொருள் ஆகிய பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய தொழில்களையும் செய்கின்றனர்.
Remove ads
குறிப்பிடத்தக்கோர்
- பேனி பிரசாத் வர்மா, உருக்கு துறை அமைச்சர்
கொமெய்னி & காமெனியின் முன்னோர்
- பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிண்டூர் கிராமத்தில் ஈரானின் அதியுயர் தலைவர்களான ரூகொல்லா கொமெய்னி மற்றும் அலி காமெனி ஆகியோர்களின் முன்னோரான சியா இசுலாம் மதகுரு சையத் அகமது முசாவி இந்தி என்பவர் முகலாயப் பேரரசின் ஆட்சியில், கிண்டூர் கிராமத்தில் வாழ்ந்தார். சையத் முசாவி இந்தி 1830ஆம் ஆண்டில் ஈராக்கில் நஜாப் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்ட சியா இசுலாமின் முதல் இமாம் இமாம் அலியின் புனித அடக்கத் தலத்தை வணங்கி, மஸ்சாத் நகரத்தில் குடியேறினார்.[5][6]
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads