காளான்

From Wikipedia, the free encyclopedia

காளான்
Remove ads

காளான் (ஆம்பி[1]) என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

Thumb
Eatable Natural mushroom உண்ணக்கூடிய இயற்கை காளான்
Thumb
The Panther cap (Amanita pantherina இது ஒரு நச்சுக்காளான் வகை ஆகும்)
Remove ads

நச்சுக் காளான்கள்

Thumb
இளம் Amanita phalloides, "டெத் கப் " காளான்கள்

அதிக காளான் வகைகள் நச்சுத் தன்மை, மன மாற்றம், நுண்ணுயிர் கொல்லியியல்பு, தீனுண்ம எதிர்ப்பு, அல்லது உயிரியல் கவர்ச்சி முதலான துணை வளர்ச்சிக் கூறுகளை உற்பத்தி செய்கின்றன. ஆயினும், குறைந்த எண்ணிக்கையான  காளான்களே மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏனையவை சகிக்கமுடியாத  கடுமையான அறிகுறிகளை தரக்கூடியவை. இந்த நச்சுத் தன்மை காளான்கள் பூஞ்சன இழையில் இருந்து வித்திகள் விருத்தியின் போது  அவற்றை ஏனைய அங்கிகளால் உண்ணப்படுவதில் இருந்து பாதுகாக்கும் உத்தியாகவே நடைபெறுகின்றது.

நச்சுக்காளான்களை இனங்காணல்

Thumb

சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,

Remove ads

காளான் வகைகள்

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக்காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும். 2000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவு காணப்படுகிறது. உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன.[2]

Remove ads

காளான்களுக்கு தேவையான சத்துக்கள்

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன. எனவே, இவை உணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் காளான் ஒட்டுண்ணியாகவும் சாறுண்ணியாகவும் உள்ளது. மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும். இவற்றை அழிக்க " காளான் கொல்லி" என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

போசனைக் கூறுகள்

விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...

பச்சையாக, கபிலக் காளான்கள் 92% நீர் , 4% கார்போவைதரேட்டு, 2% புரதம் மற்றும் 1%க்கு குறைவான கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் 100 கிராம் (3.5அவுன்சு) பச்சைக் காளான் 22 கலோரிகள் பெருமளவு உயிர்ச்சத்து பி அதாவது ரிபோஃபிளாவின், நியாசின் மற்றும் பந்தோதேனிக் கமிலம்,செலானியம்,செப்பு மற்றும் சிறிய அளவு பொசுபரசு, நாகம் ,பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Remove ads

காளான்களின் இனப்பெருக்கம்

Thumb
மரப்பட்டையில் வளர்ந்திருக்கும் காளான்

காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் நேரிடுகிறது.

காளான்களின் பயன்கள்

  • மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
  • உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
  • பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
  • மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன.
  • ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.

உண்ணத்தக்க காளான்கள்

காளான்கள் சீனா, கொரியா, ஐரோப்பா, சப்பான் என பல்வேறு நாடுகளில் சமையல் கலைகளிலும் சிறப்பான சமையல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகளின் சமையல் உலகில் காளான்கள் இறைச்சியாகவே கொள்ளப்படுகின்றது. மீச்சந்தைகளில் விற்கப்படுகின்ற பெருமளவிலான காளான் வகைகள் வர்த்தக ரீதியல் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை.

உசாத்துணை

  1. இளையர் அறிவியல் களஞ்சியம். மணவை பப்ளிகேஷன். 1995
  2. http://botit.botany.wisc.edu/toms_fungi/apr2002.html
  3. http://www.abc.net.au/science/news/enviro/EnviroRepublish_828525.htm

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads