பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு

From Wikipedia, the free encyclopedia

பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு
Remove ads

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு (Unrepresented Nations and Peoples Organization (UNPO) பிரதிநிதித்துவம் அற்ற, ஒடுக்கப்பட்ட நாடற்ற தேசிய இன மக்கள் மற்றும் நாடு கடந்த அரசுகளின் குரலை உலகளவில் ஒலிப்பதற்காக, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான த ஹேக்கில் 11 பிப்ரவரி 1991 அன்று நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.[3][4]நாடாற்ற தேசிய இன மக்கள் சிறுபான்மை குழுவினர், நாடு கடந்த அரசுகள், இராணுவப் புரட்சியால் கைப்பற்றப்பட்ட பகுதியின் மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

விரைவான உண்மைகள் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, தலைமையிடம் ...

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, சுயநிர்ணய உரிமை பற்றிய புரிதலையும், மரியாதையையும் வளர்ப்பதற்கு செயல்படுகிறது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் தன்னாட்சி தொடர்பான ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குகிறது. மேலும் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் குழுக்களுக்கு பன்னாட்டு அளவில் எவ்வாறு வாதிடுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது. இவ்வமைப்பின் உறுப்பு குழுக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கு சர்வதேச பதிலை நேரடியாக ஆதரிக்கின்றன.

இவ்வமைப்பின் முன்னாள் நாடற்ற தேசிய இனத்தவர்களான ஆர்மீனியா, சியார்சியா, எசுத்தோனியா, லாத்வியா, கிழக்கு திமோர் மற்றும் பலாவு நாடுகள் முழு இறையாண்மை பெற்ற நாடுகளாக உருப்பெற்றுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் அவையிலும் உறுப்பினர்களாக உள்ளது. [5][6]

Remove ads

நோக்கங்கள்

  • மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் பிற சர்வதேச கருவிகளில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தரங்களை பின்பற்றுவது.
  • ஜனநாயகப் பன்மைத்துவத்தின் கொள்கைகளைப் பின்பற்றுதல் மற்றும் சர்வாதிகாரத்தையும் மத சகிப்பின்மையையும் நிராகரித்தல்.
  • அகிம்சையை ஊக்குவித்தல் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாக நிராகரித்தல்.
  • இயற்கைச் சூழலின் பாதுகாப்பு உறுதிப்டுத்துதல்.

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இதன் உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும்.[7]இதன் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் எவ்வித தீவிரவாத செயல்களில் ஈடுபடக்கக்கூடாது.[8]

Remove ads

உறுப்பினர்கள்

பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள்:[9]

மேலதிகத் தகவல்கள் உறுப்பினர், சேர்ந்த நாள் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads