புக்கிட் கியாரா எம்ஆர்டி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புக்கிட் கியாரா எம்ஆர்டி நிலையம் அல்லது புக்கிட் கியாரா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bukit Kiara Selatan MRT station; மலாய்: Stesen MRT Bukit Kiara Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் கியாரா புறநகர்ப் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் KG12A CC01 புக்கிட் கியாரா, பொது தகவல்கள் ...

காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (MRT Kajang Line) மற்றும் எம்ஆர்டி சுற்று வழித்தடம் (MRT Circle Line) ஆகிய இரு வழித்தடங்களில் இந்த நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் கட்டுமானத்திற்கு முன்மொழியப்பட்ட இடம் பிலியோ டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் மற்றும் பூசாட் பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் (Pusat Bandar Damansara MRT station) ஆகிய நிலையங்களுக்கு இடையில் உள்ளது.

இந்த நிலையம் இரண்டு வழித்தடங்களுக்கும் ஒரு பரிமாற்ற நிலையமாகக் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கட்டுமானப் பணிகள் 2023-இல் தொடங்கப்பட்டன. புக்கிட் கியாரா சவுத் (Bukit Kiara South) என்ற செயல்பாட்டுப் பெயரில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாக விள்ங்கும்.[2]

Remove ads

அமைவிடம்

புக்கிட் கியாரா செலாத்தான் எம்ஆர்டி நிலையம், புக்கிட் கியாரா புறநகர்ப் பகுதியின் தெற்கே கட்டப்படுகிறது. அங்கு அதன் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடங்கள், மாநாட்டு மையங்கள், ஒரு சிறிய குடியிருப்பு சமூகம், விளையாட்டு வளாகங்கள் மற்றும் அரச சிலாங்கூர் மன்றம் ஆகியவற்றிற்குச் சேவை செய்யும். இந்த நிலையத்தின் அமைவிடமும் மேடான் டாமன்சாரா குடியிருப்புப் பகுதியின் எல்லைக்குள் உள்ளது.[3]

எம்ஆர்டி சுற்று வழித்தடம்

எம்ஆர்டி சுற்று வழித்தடம் அல்லது பெரும் விரைவு தொடருந்து சுற்று வழித்தடம் (ஆங்கிலம்: MRT Circle Line மலாய்: Laluan MRT Lingkaran என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் திட்டமிடப்பட்டு உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து வழித்தடம் (Mass Rapid Transit) (MRT) ஆகும்.

இந்த வழித்தடம், மலேசியாவில் முழு ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொடருந்து அமைப்புகளில் ஐந்தாவது வழித்தடம் ஆகும். ஏற்கனவே, இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ள கிளானா ஜெயா வழித்தடம் அந்தத் தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது.

Remove ads

ஒருங்கிணைந்த போக்குவரத்து

இந்த வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டதும், கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் ஒரு சுற்றுவட்டத் தொடருந்துப் பாதையை உருவாக்கும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடத்தின் எண் 13 என்றும் நீல ஊதா நிறத்திலும் இருக்கும்.[4]

4 சூலை 2024-க்கு முன்னர் இந்த வழித்தடம், வழித்தடத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சாம்பல் நிறத்தில் இருந்தது.[5] கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்துப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழித்தடம் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது.[6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads