புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bukit Jalil LRT Station; மலாய்: Stesen LRT Bukit Jalil; சீனம்: 武吉加里爾站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் (Bukit Jalil National Stadium அல்லது National Sports Complex) என்று முன்பு அழைக்கப்பட்ட கோலாலம்பூர் விளையாட்டு நகரத்திற்கு (KL Sports City) அருகாமையில் இந்த நிலையம் அமைந்து உள்ளது. அதன் காரணமாக விளையாட்டு இரசிகர்கள் பலராலும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையம் காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு, தினமும் இரவு 11.25 மணிக்கு மூடப்படும்; இருப்பினும் முக்கிய நிகழ்வுகளின் போது, அதன் இயக்க நேரம் நீட்டிக்கப்படுகிறது.[2]
Remove ads
பொது
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் முன்பு சுக்கான் நெகாரா நிலையம் (Sukan Negara station) என்று அழைக்கப்பட்டது.[3]
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 11 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது.
அமைவு
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; சுங்கை பீசி நிலையத்திற்கு பின்னரும் புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தின் மையப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், உள்நாடு வெளிநாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கு எளிதான போக்குவரத்து அணுகலையும் வழங்குகிறது.
மலேசிய தொழில்நுட்ப பூங்காவிற்கு (Technology Park Malaysia) மிக அருகில் உள்ள தொடருந்து நிலையம் இதுவாகும். மலேசிய தொழில்நுட்ப பூங்கா என்பது மலேசியாவின் அறிவு சார்ந்த தொழில்களுக்கான உயர் ஆய்வு மற்றும் மேம்பட்ட ஆய்வு மையமாகும்.
Remove ads
அமைப்பு
L1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> AG1 SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) AG11 SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தெருநிலை | கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் |
Remove ads
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்
- 2017
- 2017[4]
- 2017
- 2022
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads