புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் மாநகரில் உள்ள நிலத்தடி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் அல்லது பெவிலியன் கோலாலம்பூர்–புக்கிட் பிந்தாங் நிலையம்; (ஆங்கிலம்: Bukit Bintang MRT Station அல்லது Pavilion Kuala Lumpur–Bukit Bintang MRT Station; மலாய்: Stesen MRT Bukit Bintang) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புக்கிட் பிந்தாங் நகர மையத்தில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
முன்பு இந்த நிலையம் சுங்கை பூலோ-காஜாங் வழித்தட நிலையம் என அறியப்பட்டது. தற்போது செரி பெட்டாலிங் வழித்தடம்; அம்பாங் வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ளது.
சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானங்கள் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன; பின்னர் 17 சூலை 2017-ஆம் திகதி இந்த நிலையம் திறக்கப்பட்டது.[1][2]
Remove ads
அமைவு
புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள சிறு வணிகக் கட்டிடங்கள்; மற்றும் வணிக வளாகங்களுடன் இணைக்கப்பட்ட 5 நடைபாதைகள் - நுழைவாயில்கள் இந்த நிலையத்தில் உள்ளன. இதில் கோலாலம்பூர் பெவிலியன், தி இசுடார்கில் மற்றும் பாரன்கீட் 88 போன்ற பண் கடை கட்டிடங்கள் (Shopping Malls) அடங்கும்.[3]
இந்தப் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம், ஒருங்கிணைக்கப்படாத ஒரு தனி நிலையமாகும். புக்கிட் பிந்தாங் எனும் பெயரில் புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் என மற்றும் ஒரு நிலையம் உள்ளது. இந்த புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் 8 கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தினால் சேவை செய்யப்படுகிறது.[4]
Remove ads
வரலாறு
முந்தைய திட்டங்களின்படி, புக்கிட் பிந்தாங்கில் இரண்டு நிலையங்கள் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டது. அதாவது புக்கிட் பிந்தாங் மேற்கு நிலையம்; மற்றும் புக்கிட் பிந்தாங் கிழக்கு நிலையம். ஆனால் பின்னர் ஒரே ஒரு KG18A புக்கிட் பிந்தாங் நிலையமாக குறைக்கப்பட்டது.[5]
நிலையத்திற்குப் பெயரிடும் உரிமையை பெவிலியன் கோலாலம்பூர்[5] பெற்றுள்ளது. பெவிலியன் கோலாலம்பூர் வணிக வளாகம், புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையத்தின் கிழக்கே அமைந்துள்ள ஓர் உயர்தர பண்கடை கட்டிடத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.[6]
Remove ads
காஜாங் வழித்தடம்
9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[7]
நிலைய அமைப்பு
G | தெருநிலை | புக்கிட் பிந்தாங், புக்கிட் பிந்தாங் சாலை, சுல்தான் இசுமாயில் சாலை |
B1 | இணைப்புவழி | நுழைவாயில்கள், கடைத் தளங்கள், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள், தகவல் முகமை, பயணச்சீட்டு வாயில்கள், 1 மற்றும் 2 நடைபாதைகளுக்குச் செல்லும் படிக்கட்டுகள்/நகரும் படிக்கட்டுகள்/மின்தூக்கிகள் |
B2 | எம்ஆர்டி நிலையக் கட்டுப்பாடு, எம்ஆர்டி வாடிக்கையாளர் சேவை அலுவலகம், டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் கட்டண நுழைவாயில்கள் (→) நுழைவாயில் C, (→) பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழி (→) நடைபாதை | |
B4 | நடைமேடை 1: 9 காஜாங் (→) SBK35 காஜாங் (→) | |
பிளவு தளம் - கதவுகள் இடதுபுறம் திறக்கும். | ||
நடைமேடை 2: 9 காஜாங் (→) KG04 குவாசா டாமன்சாரா (←) |
இந்த நிலையத்திற்கான தளவமைப்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற நிலையங்களில் காணப்படாத தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது. புக்கிட் பிந்தாங் சாலை மற்றும் ஜாலான் சுல்தான் இசுமாயில் சாலைச் சந்திப்புகளைச் சுற்றி 5 நுழைவாயில்கள் வரை உள்ளன. இதனால் பயணிகள் அருகிலுள்ள பல வணிக வளாகங்களுக்கு எளிதாக அணுகலாம்; எடுத்துக்காட்டாக கோலாலம்பூர் பெவிலியன்; லாட் 10.
குறைந்த இடவசதி கொண்ட பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், கட்டுமானத்திற்கு வழி வகுக்கும் வகையில் சுமார் 28 மீட்டர் ஆழத்தில் நிலத்தடியில் கட்டப்பட வேண்டியிருந்தது. இது புக்கிட் பிந்தாங் சாலையில் உள்ள கட்டிடங்களை இடிப்பதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.[8] 9 காஜாங் வழித்தடத்தில் உள்ள 31 நிலையங்களில் 20 மீட்டர் நீளமுள்ள மிக நீளமான நகரும் படிக்கட்டுகளையும் இந்த நிலையம் கொண்டுள்ளது.
அத்துடன் 9 காஜாங் வழித்தடத்தில் பிளவு நடைத் தளங்களைக் கொண்ட இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அந்த வகையில் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் தனித்துவமானது; அதாவது இந்த நிலையத்தின் வழித்தடங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன (Split Platforms). ஒரு வழித்தடம் KG04 PY01 குவாசா டாமன்சாராவிற்குச் செல்கிறது; மற்றொன்று KB06 KG35 காஜாங் நிலையத்திற்குச் செல்கிறது.
Remove ads
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
எம்ஆர்டி நிலையத்திற்கும் மோனோரயில் நிலையத்திற்கும் இடையிலான எதிர்கால ஒருங்கிணைப்புக்காக நுழைவாயில் B ஒதுக்கப்பட்டுள்ளது.
Remove ads
காட்சியகம்
புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் (2024)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads