துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Tun Razak Exchange MRT Station அல்லது Tun Razak Exchange – Samsung Galaxy MRT Station; மலாய்: Stesen MRT Tun Razak Exchange) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் தற்போது கோலாலம்பூர் துன் ரசாக் சாலை, கமுனிங் சாலை, இனாய் சாலை மற்றும் டெலிமா சாலைப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
இந்த நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகும். 9 சுங்கை பூலோ-காஜாங் வழித்தடம்; மற்றும் 12 புத்ராஜெயா வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களுக்கும் இடையிலான ஒரு குறுக்கு-தள பரிமாற்ற (Cross-Platform Interchange) நிலையமாக விளங்குகிறது.
சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1][2][3] மார்ச் 16, 2023-இல் 9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியபோது, துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம், 12 புத்ராஜெயா வழித்தடத்தின் ஒரு பரிமாற்று நிலையமாக மாறியது.
Remove ads
அமைவு
துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் தற்போது கோலாலம்பூர் கம்போங் பாண்டான் வட்டச்சுற்று சாலைக்கு அருகில் உள்ள துன் ரசாக் சாலைககு கீழே அமைந்துள்ள ஒரு நிலத்தடி நிலையமாகும்.
இந்த நிலையம் கோலாலம்பூரின் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் நிதி வளாகத்தின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இது மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. தி எக்ஸ்சேஞ்ச் கடைவலக் கட்டிடத்துடன் (The Exchange Shopping Mall) நேரடி இணைப்பு வழியைக் கொண்டுள்ளது.
Remove ads
காஜாங் வழித்தடம்
9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
12 புத்ராஜெயா வழித்தடத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[4]
நிலைய அமைப்பு
இந்த நிலையம் 9 காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள மிக ஆழமான நிலத்தடி நிலையமாகும். மேலும் தரை மட்டத்துடன் கூடுதலாக 7 நிலத்தடி நிலைகளைக் கொண்டுள்ளது. 7 நிலைகளில், 4 நிலைகள் பொது தளங்களாகும்; மற்றவை இயந்திரத் தளவாடங்கள் மற்றும் தளவாடப் பொருட்களைக் கொண்டுள்ளன.
G | தெருநிலை | நுழைவாயில் A (→) நுழைவாயில் B, (→) பேருந்து நிறுத்தம், தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் |
B2 | மேல் இணைப்புவழி | நிலத்தடி இணைப்புவழி (→) துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) கடைவலக் கட்டிடம் |
B4 | கீழ் இணைப்புவழி | பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (→) தகவல் முகமை, பயணச்சீட்டு வாயில்கள் (→) நகரும் படிக்கட்டுகள்/மின்தூக்கிகள் |
B5 | மேல் நடைமேடை | நடைமேடை 1: 9 காஜாங் (→) KG35 காஜாங் (←) |
தீவு மேடை | ||
நடைமேடை 3: 12 புத்ராஜெயா (→) PY41 புத்ராஜெயா சென்ட்ரல் (←) | ||
B7 | கீழ் நடைமேடை | நடைமேடை 2: 9 காஜாங் (→) KG04 குவாசா டாமன்சாரா (→) |
தீவு மேடை | ||
நடைமேடை 4: 12 புத்ராஜெயா (→) PY01 குவாசா டாமன்சாரா (→) |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads