புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்
கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை - புக்கிட் பிந்தாங் சாலை, மோனோரெயில் நிலையம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் (ஆங்கிலம்: Bukit Bintang Monorail Station; மலாய்: Stesen Bukit Bintang Monorail; சீனம்: 武吉免登单轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.
இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]
இந்த மோனோரயில் நிலையம் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையம் அல்ல (Integrated); இதே நிலையத்தில் மற்றும் ஒரு எம்ஆர்டி நிலையம் உள்ளது. அந்த நிலையம் காஜாங் வழித்தடத்தின் மூலமாக புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் எனும் பெயரில் தனியாக இயங்குகிறது.
Remove ads
பொது
கேஎல் மோனோரெயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், இந்த நிலையம், 13 செப்டம்பர் 2015 அன்று விரிவுபடுத்தப்பட்டது. இஸ்கோமி (Scomi) நிறுவனத்தின் தயாரிப்பான இஸ்கோமி சூத்ரா (Scomi SUTRA) 4 பெட்டி மோனோரெயில்களை நிறுத்துவதற்காக அந்த விரிவாக்கம் நடைபெற்றது. மேலும் அண்டை வணிக வளாகங்ககளுக்கு நேரடியாகச் செல்லும் 3 புதிய நுழைவாயில்களும் அந்தப் புதிய நிலையத்தில் இணைக்கப்பட்டன.
புக்கிட் பிந்தாங் சாலையின் பெயரால் புக்கிட் பிந்தாங் நிலையம் பெயரிடப்பட்டது. கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களில் புக்கிட் பிந்தாங் நிலையமும் ஒன்றாகும்.
Remove ads
பெயரிடும் உரிமைகள் திட்டம்
2003-ஆம் ஆண்டு திறக்கப்பட்டதில் இருந்து இந்த நிலையம், புக்கிட் பிந்தாங் நிலையம் என்று அழைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டில், மலேசிய குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியாவிற்கு, இந்த நிலையத்தின் உரிமையாளர் பிரசரானா மலேசியா, நிலையப் பெயரிடும் உரிமைகள் திட்டத்தின் கீழ் பெயரிடும் உரிமையை வழங்கியது.
பின்னர், அக்டோபர் 9, 2015 அன்று இந்த நிலையம் ஏர் ஆசியா - புக்கிட் பிந்தாங் என மறுபெயரிடப்பட்டது.[3][4] இருப்பினும், அந்த ஒப்பந்தம் 2019-இல் நிறுத்தப்பட்டது; மற்றும் ஏர்ஏசியா முன்னொட்டைக் கொண்ட அனைத்து அடையாளங்களும் நிலையத்திலிருந்து அகற்றப்பட்டன.
Remove ads
நிலைய தள அமைப்பு
L2 | தள நிலை | பக்க மேடை |
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR11 தித்திவங்சா நிலையம் (→) | ||
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR1 கோலாலம்பூர் சென்ட்ரல் (←) | ||
பக்க மேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B |
G | தெரு நிலை | சுல்தான் இசுமாயில் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C |
இந்த நிலையத்தில் ஐந்து வெளியேறும் வழிகள் உள்ளன. அருகிலுள்ள இம்பி நிலையத்தைப் போலவே, இந்த புக்கிட் பிந்தாங் நிலையமும், பல்வேறு கடைவல மையங்களில் இருந்து (இஸ்டார்கில் காட்சியகம், லோ யாட் பிளாசா, கோலாலம்பூர் பெவிலியன், பாரன்கீட் 88, லாட் 10, இம்பி பிளாசா மற்றும் சுங்கை வாங் பிளாசா உட்பட) நேரடியாக நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
நுழைவாயில்கள்
Remove ads
அருகாமை இடங்கள்
- பாரன்கீட் 88
- லாட் 10
- இஸ்டார்கில் காட்சியகம்
- சுங்கை வாங் பிளாசா
- கோலாலம்பூர் பெவிலியன்
- புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம்
காட்சியகம்
புக்கிட் பிந்தாங் நிலையக் காட்சிப் படங்கள்:
- (2006)
- (2020)
- (2021)
- (2021)
- (2021)
- (2021)
- (2021)
- (2023)
- (2023)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads