புஞ்சாக் பெர்தானா

சா ஆலாம் வடக்குப் பகுதியில் ஒரு நகரியம் From Wikipedia, the free encyclopedia

புஞ்சாக் பெர்தானாmap
Remove ads

புஞ்சாக் பெர்தானா, (மலாய்; ஆங்கிலம்: Puncak Perdana; சீனம்: 黄金峰); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். இந்த நகரியம் புக்கிட் செராக்காவில் 240 எக்டேர் பரப்பளவில் சுபாங் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் உருவாக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் புஞ்சாக் பெர்தானா, நாடு ...
Thumb

இது மேரு (Meru) மற்றும் சுபாங் வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அத்துடன் செத்தியா ஆலாம் (Setia Alam) நகரத்திற்கு அருகிலும் உள்ளது.

Remove ads

கட்டுமானம்

இந்த நகரத்தின் அசல் உருவாக்குநர் சென்ட்ரல் சேலஞ்சர் நிறுவனம் (Central Challenger Sdn Bhd) ஆகும். இந்த நிறுவனம் புஞ்சாக் நியாகா குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த நகரம் மூன்று கட்டத் திட்டமாக அக்டோபர் 1996-இல் கட்டப்பட்டது. இமுதல் கட்டம் நவம்பர் 1996 இல் தொடங்கியது.[2] இது புத்ராஜெயா போன்ற ஒரு பல்லூட நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வசதிகள்

இந்த நகரத்தில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UiTM) (Universiti Teknologi MARA) புஞ்சாக் ஆலாம் வளாகம் உள்ளது. 4.39 கிமீ² பரப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3]

இந்தப் பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் 34 வளாகங்கள் உள்ளன. இதன் அருகில், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மருத்துவமனையும் (UiTM University Hospital) உள்ளது.[4]

Remove ads

போக்குவரத்து

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புஞ்சாக் பெர்தானா பகுதிக்கு சா ஆலாம் செக்சன் 13 வழியாகச் செல்லலாம். இதற்கு ரேபிட் கேஎல் 754  பேருந்து சேவை நடைமுறையில் உள்ளது.

இந்தப் பேருந்து தாமான் துன் டாக்டர் இசுமாயில் குடியிருப்பு பகுதியையும் கடந்து செல்லும்.[5]

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads