புத்தாத்தான் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்தாத்தான் மாவட்டம்; (மலாய்: Daerah Putatan; ஆங்கிலம்: Putatan District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் புத்தாத்தான் நகரம் (Putatan Town).
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள இதர மாவட்டங்களான கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District); கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District), பாப்பார் மாவட்டம் (Papar District), பெனாம்பாங் மாவட்டம் (Penampang District); ரானாவ் மாவட்டம் (Ranau District); துவாரான் மாவட்டம் (Tuaran District) ஆகிய மாவட்டங்களுடன் ஒரு பகுதியாக இந்த புத்தாத்தான் மாவட்டமும் அமைந்து உள்ளது.
Remove ads
சொற்பிறப்பியல்
புத்தாத்தான் மாவட்டத்தின் பெயர் புத்தாட் (Putat) என்பதில் இருந்து உருவானது. ஒரு காலத்தில் புத்தாத்தான் பகுதியில் புத்தாட் எனும் அதிகமாய்ப் பூக்கும் மரங்கள் இருந்தன. அந்த வகை மரங்கள் புத்தாத்தான் சதுப்புநிலங்களில் அதிகமாக இருந்ததால் அந்த இடத்திற்கு புத்தாத்தான் என்று பெயர் வந்தது.
பொது
புத்தாத்தான் மாவட்டத்தின் தலைநகரமான புத்தாத்தான் நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் (Greater Kota Kinabalu) துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். புத்தாத்தான் நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[2]
இந்த நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில் தான் புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.
Remove ads
வரலாறு
1884-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ்; பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் கீழ்; பிரித்தானிய ஆட்சியில்; இந்தப் புத்தாத்தான் நகரம் ஒரு நிர்வாக மையமாக மாற்றப்பட்டது.[3]
புத்தாத்தான் நகரில் டூசுன் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவராய் வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் புரூணை மலாய்க்காரர்கள், கடசான் பழங்குடி மக்கள், பஜாவு பழங்குடி மக்கள் மற்றும் சீனர்கள் வாழ்கிறார்கள்.[3]
புத்தாத்தான் மாவட்ட மன்றம்
2010 ஆகஸ்டு 2-ஆம் தேதி, பெனாம்பாங் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக புத்தாத்தான் மாவட்ட மன்றம் (Putatan District Council) நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டு முதல், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை தொடர்பான விசயங்கள் மட்டுமே பெனாம்பாங் மாவட்ட மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாக உள்ளன.
மற்ற அனைத்து அதிகாரப்பூர்வத் துறைகளிலும், புத்தாத்தான் மாவட்ட மன்றத்திற்கு முழுமையாக தகுதி வழங்கப்பட்டு உள்ளது.
மக்கள்தொகை
2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புத்தாத்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை சுமார் 54,733 என மதிப்பிடப்பட்டு உள்ளது, முக்கியமாக புரூணை மலாய் மக்கள்; பஜாவு மக்கள்; மற்றும் கணிசமான எண்ணிக்கையில் கடசான்-டூசுன்; சீனர்களும் உள்ளனர்.
காட்சியகம்
- லோக் காவி-பெங்கலாட் சாலை
- லோக் காவி வனவிலங்கு பூங்கா
- ஒன் பிளேஸ் மால்
- பெதகாஸ் போர் நினைவுச்சின்னம்
- சபா அல்-பிருனி கண்காணிப்பகம்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads