புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்
கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள போக்க From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா அயிட்ஸ் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Putra Heights LRT Station; மலாய்: Stesen LRT Putra Heights; சீனம்: 布特拉高原站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]
உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், சிலாங்கூர், சா ஆலாம், சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ், பெர்சியாரான் புத்ரா இண்டா அருகில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவு
பிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது. மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு, இந்த நிலையத்தில் தான் கிளானா ஜெயா வழித்தடம்; செரி பெட்டாலிங் ஆகிய இரு வழித்தடங்களும் இணைகின்றன.
பிரசரானாவின் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 25 நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் சூன் 2016-இல், திறக்கப்பட்டது. சுபாங் ஜெயா, புத்ரா அயிட்ஸ் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருப்பதால், புத்ரா அயிட்ஸ் எனும் பெயர் இந்த நிலையத்திற்கும் சூட்டப்பட்டது.[4]
தனித்தனி வழித்தடங்கள்=
கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 2 பக்க மேடைகள் மற்றும் 1 தீவு மேடையுடன் நான்கு மேடைகளைக் கொண்டுள்ளது.
இரண்டு வழித்தடங்களிலும் உருவாக்கப்பட்ட வெவ்வேறு தொடருந்து அமைப்பின் காரணமாக, அவை ஒரே வழித்தடத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அதற்குப் பதிலாக அவற்றுக்கான தனித்தனி வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம், சிறப்பான ஓர் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையமாக அறியப்படுகிறது.
Remove ads
கிளானா ஜெயா வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]
ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.
கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.[6]
Remove ads
பேருந்து சேவைகள்
காட்சியகம்
புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
- KG04 PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்; இதே போன்ற பரிமாற்றத் தளத்தைக் கொண்டது
- கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்
- #யூஎஸ்ஜே சுபாங் ஜெயா
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads