பூம்புகார் நகர், கொளத்தூர்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பூம்புகார் நகர் (Poompuhar Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் புறநகர்ப் பகுதிக்கு அருகில், 13°07′16.0″N 80°12′48.2″E (I.e., 13.121100°N, 80.213400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கொளத்தூர், இலட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர் , பெரியார் நகர், வில்லிவாக்கம், ஜெனரல் குமாரமங்கலம் காலனி மற்றும் பெரம்பூர் ஆகியவை பூம்புகார் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். இப்பகுதியில் இரண்டு முக்கிய சாலைகள், 30 முக்கிய தெருக்கள் மற்றும் 28 குறுக்குத் தெருக்கள் உள்ளன. பூம்புகார் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தீர்க்க ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.[2][3] இத்திட்டத்தால் பூம்புகார் நகர் பயனடைகிறது.[4]

விரைவான உண்மைகள் பூம்புகார் நகர், கொளத்தூர்Poompuhar Nagar, Kolathur பூம்புகார் நகர், நாடு ...
Remove ads

போக்குவரத்து

சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், பூம்புகார் நகருக்குக் கணிசமான அளவில் மாநகரப் பேருந்துகளை இயக்குகிறது. இப்பகுதி கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி ஆகிய புறநகர்ப் பகுதிகளுடன் சாலை வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பூம்புகார் நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இரட்டை ஏரி சந்திப்பு, சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புறநகர் இரயில் நிலையமான வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் இவ்வூருக்கு பலனளிக்கிறது. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் ஆகியவை முறையே பூம்புகார் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

Remove ads

கல்வி

பள்ளிகள்

இங்கு அமைந்துள்ள கிட்ஸீ (Kidzee)[5] மற்றும் கிட்டீஸ் வேர்ல்ட் ப்ளே ஸ்கூல் ஆகியன குழந்தைகளுக்கான பள்ளிகளாகும்.

கல்லூரி

இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் கொளத்தூரில் இயங்கி வரும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி ஓர் அரசுக் கல்லூரியாகும்.

மருத்துவம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கும் டபிள்யூ. சி. எஃப் (WCF) மருத்துவமனை இங்கு அமையப் பெற்றுள்ளது.

ஆன்மீகம்

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இப்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை ஒன்று தற்காலிகமாகக் காட்சிப்படுத்தப்படும். அவ்வகையில், 2019 ஆம் ஆண்டு, சுமார் 3 இலட்சம் எண்ணிக்கையில் ருத்ராட்ச விதைகள் கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.[6] அவ்வாறே, 2022 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூம்புகார் நகர் பகுதியில், சுமார் 40 அடி உயர தரணி விநாயகர் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.[7]

கோயில்

இங்குள்ள சர்வ சக்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[8]

Remove ads

பொழுதுபோக்கு

பூங்கா

பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கும் மாநகராட்சிப் பூங்கா ஒன்று பூம்புகார் நகரில் அமைந்துள்ளது.

அரசியல்

பூம்புகார் நகர் பகுதியானது, கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. கே. ஸ்டாலின். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads