பேக்கால் கோட்டை
கேரளத்தில் உள்ள கோட்டை From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேக்கால் கோட்டை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையாகும். இதுதுவே கேரளத்திலேயே மிகப்பெரிய கோட்டை. இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. படிகளைக் கொண்டு உயரமாக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டியும் உயர்ந்த இடத்தில் அகன்ற படிகளைக் கொண்ட கண்காணிப்புக் கோபுரமும் இக்கோட்டையின் சிறப்பம்சங்களாகும். இக்கோட்டை அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்ற கோட்டைகளைப் போல் அரசின் மையக் கட்டிடமாக இல்லாமல் தனியே பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை காசர்கோட்டில் இருந்த 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Remove ads
அமைப்பு
கோட்டை கடலில் இருந்து வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதன் வெளிப்புறத்தின் கிட்டத்தட்ட முக்கால்வாசி பகுதி நீரை ஒட்டி உள்ளது. பெக்கால் கோட்டை ஒரு நிர்வாக மையம் அல்ல, அதில் எந்த அரண்மனையோ அல்லது மாளிகையோ இல்லை.
இங்கு உள்ள ஒரு முக்கிய அம்சம் நீர்-தொட்டி, மற்றும் திப்பு சுல்தான் கட்டிய ஒரு கண்காணிப்பு கோபுரத்திற்கு செல்லும் படிகள் [1] . கோட்டையின் நின்று, பார்த்தால் காஞ்ஞங்காடு, பள்ளிக்கார, பேக்கல், கொட்டிக்குளம், உடுமா போன்ற நகரங்களும், கரையோரங்களூயும் காணலாம்
கோட்டையின் வளைவான நுழைவாயிலும், சுற்றியுள்ள அகழியும் இதன் தற்காப்புத் திறணை வெளிப்படுத்துகின்றன. கடற்படை தாக்குதல்களிலிருந்து கோட்டையை பாதுகாக்க வெளிப்புற மதில் சுவர்களில் உள்ள துளைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல் துளைகள் தொலைதூர இலக்குகளை இலக்குகளைத் தாக்க பயன்படும்வித்ததில் இருக்கின்றன. கோட்டைக்கு அருகில் மிக நெருக்கமாக வரும் எதிரிகளைத் தாக்க கீழே உள்ள துளைகள் பயன்படுத்தபட்டன.[2]
இதன் திடமான கட்டுமானம் தலச்சேரி கோட்டை மற்றும் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட கண்ணூரில் உள்ள செயின்ட் ஏஞ்சலோ கோட்டை ஆகியவற்றை ஒத்திருக்கிறது.
Remove ads
வரலாறு
பெருமாள் காலத்தில் பேக்கால் மகோதயபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மகோதயபுரம் பெருமாள்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பேக்கால் 12 ஆம் நூற்றாண்டில் புலி நாடு அல்லது கோலாத்திரி அல்லது சிரக்கல் அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[3] கோலத்திரிகளின் ஆட்சியில் பேக்காலின் கடல் சார்ந்த முக்கியத்துவம் அதிகரித்தது. இவருகள் காலத்தில் மலபார் ஒரு முக்கியமான துறைமுக பகுதியாக ஆனது.
1565 இல் தலிகோட்டா போருக்குப் பிறகு கேளடி நாயக்கர்கள் (இக்கேரி நாயக்கர்கள்) உள்ளிட்ட குறுநில மன்னர்கள் இப்பகுதியில் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். முதலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு மையமாக பெக்காலைப் பயன்படுத்தி, பின்னர் மலபாரைக் காப்பாற்றிக்கோண்டனர். இந்த துறைமுக நகரத்தின் பொருளாதார முக்கியத்துவமானது பேக்காலை பலப்படுத்த நாயக்கர்களைத் தூண்டியது. கிரியா வெங்கடப்ப நாயக்கர் கோட்டையின் கட்டுமானத்தைத் தொடங்கினார், இது கி.பி 1650 இல் சிவப்ப நாயக்கரால் முடிக்கப்பட்டது. காசர்கோடு அருகே சந்திரகிரி கோட்டையும் இந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது.[1]
ஐதர் அலி நாயக்கர்களைக் தோற்கடித்ததும், பேக்கால் மைசூர் அரசின் கைகளில் விழுந்தத பிறகு இந்த பகுதியைக் கைப்பற்ற கோலத்திரிகளுக்கும் நாயக்கர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. [1] .
திப்பு சுல்தானின் தலைமையில் மலபாரை கைப்பற்ற நடத்தபட்ட இராணுவப் படையெடுப்பின் போது முக்கியமான இராணுவ நிலையமாக இது இருந்தது. பேக்கால் கோட்டையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் காணப்படும் நாணயங்கள் மற்றும் கலைப்பொருட்கள் மைசூர் சுல்தான்களின் வலுவான இருப்பைக் குறிக்கின்றன. நான்காவது ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் திப்பு சுல்தானின் மரணத்திற்குபிறகு, 1799 இல் இந்த கோட்டை பிரிதானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது [1][4] மற்றும் பம்பாய் ஆளுநரகத்தின் ஆட்சியில் இருந்த தென் கன்னட மாவட்டத்தின் பேக்கால் தாலுகாவின் தலைமையகமாக இது மாறியது. இதன் பின்னர், பேக்காலும், இந்ன் துறைமுகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறைந்தது.
அனுமனின் முக்கியப்பிரணா கோயில் அருகிலல், பண்டைய முஸ்லீம் மசூதி இருப்பது இப்பகுதியில் நிலவிய மத நல்லிணக்கத்திற்கு சான்றாகும்.
Remove ads
சுற்றுலா
இந்திய ஒன்றிய அரசு 1992 இல் பேக்கால் கோட்டையை ஒரு சிறப்பு சுற்றுலாப் பகுதியாக அறிவித்தது [5] மற்றும் அதை மேம்படுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெக்கால் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்கியது [6] . பம்பாய் திரைப்படத்தின் 'உயிரே' (தமிழ்) பாடல் பேக்கால் கோட்டையில் படமாக்கப்பட்டது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads