மகுரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகுரியா (நுபியன்: ⲇⲱⲧⲁⲩⲟ, Dotawo; கிரேக்கம்: Μακογρια, Makouria; அரபி: مقرة, al-Muqurra) இராச்சியம் அமைவிடம் தற்போதைய தெற்கு எகிப்து மற்றும் வடக்கு சூடான் பகுதியில் அமைந்திருந்தது. இந்த இராச்சியம் நைல் நதியின் கரையோரம் அமைந்த ஒரு முடியாட்சி பகுதி ஆகும். இதன் தலைநகரம் டங்கோலா ஆகும்.[2][3]
Remove ads
எழுச்சி
6 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் கிருத்துவ மத மாற்றத்திற்கு பிறகு இந்த இராச்சியம் எழுச்சி அடைந்தது. ஆனால் 7 ஆம் நூற்றாண்டு பகுதியில் இஸ்லாம் இராணுவ படை எகிப்து நாட்டில் காலூன்றியது. 651 ஆம் ஆண்டு அரபு படை மகுரியாவைத் தாக்கியது.[4] ஆனால் மகுரியாவின் பதில் தாகுதல் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு வித்திட்டது. இது 13 ஆம் நூற்றாண்டு வரை இரு தரப்பினரும் அமைதியாக இருக்க உதவியது. 7 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா இராச்சியம் தனது அன்டை இராச்சியங்களான வடக்கே நோபாடியாவுடனும், தெற்கே அலோடியாவுடனும் நல்லுறவை பெற்று பலமான இராச்சியமாக இருந்தது.[5]
Remove ads
கலை வளர்ச்சி
9-11 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா அபார வளர்ச்சி கண்டது. இந்த காலகட்டத்தில் கலாச்சாரம், மொழி, கட்டடக்கலை, சுவர் ஓவியக்கலை முதலியன வளர்ச்சி கண்டது.[6]
வீழ்ச்சி
எகிப்தியர்களின் ஆக்ரோசமான தாக்குதல், இஸ்லாமிய இனக்குழுக்களின் ஊடுருவல் மற்றும் கொள்ளைநோய் தாக்குதலால் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா இராச்சியம் வீழ்ச்சி அடைந்தது. 1365 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போர் மூலம் இராச்சியதின் தென் பகுதியை இழந்தது. தலைநகரான டங்கோலா அழிக்கப்பட்டது. 1560 ஆண்டு பகுதியில் உதுமானியப் பேரரசு ஆட்சியின் கீழ் இப் பகுதி வந்தது. இதனால் இங்கு இஸ்லாம் மத மாற்றம் ஏற்பட்டது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads