மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள்

மலேசியாவின் 13 மாநில சட்டமன்றங்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் (State Legislative Assembly, மலாய்: Dewan Undangan Negeri, DUN, சீனம்: 马来西亚州议会) என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில்; ஒவ்வொன்றிலும் உள்ள மாநில அரசாங்கங்களின் சட்டமன்றக் கிளைகள் ஆகும்.[1]

மலேசிய அரசியலமைப்பின் வழி மாநிலச் சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை இந்தச் சட்டமன்றங்கள் கொண்டுள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற கட்சி மாநில அரசாங்கத்தை அமைக்கின்றது.[2]

பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் மாநில அரசாங்கத்தை அமைக்கின்றார். பரம்பரை ஆட்சியாளர்களைக் கொண்ட மாநிலங்களில் அந்தக் கட்சியின் தலைவர் மந்திரி பெசார் என்று அழைக்கப்படுகிறார். அதே வேளையில் பரம்பரை ஆட்சியாளர்கள் இல்லாத மாநிலங்களில் முதலமைச்சர் என்று அழைக்கப் படுகிறார்.[3]

Remove ads

பொது

Thumb
கட்சிகளின் அடிப்படையில் தீபகற்ப மலேசியா
Thumb
கட்சிகளின் அடிப்படையில் சபா, சரவாக்.

மலேசிய நாடாளுமன்றத்தில், மக்களவை (மலேசியா); மேலவை (மலேசியா); என இரு அவைகள் உள்ளன. மலேசிய நாடாளுமன்ற அமைப்பைப் போல் அல்லாமல், மாநில சட்டமன்றங்கள் ஒரே ஒரு சபையைக் கொண்டு இயங்குகின்றன. மந்திரி பெசார் அல்லது முதலமைச்சர்; இவர்களின் ஆலோசனையின் பேரில் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்க பரம்பரை ஆட்சியாளர்களும் (சுல்தான்கள்); யாங் டி பெர்துவாக்களும் (ஆளுநர்கள்) அதிகாரம் பெற்றுள்ளனர்.

மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட அறுபது (60) நாட்களுக்குள் இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக, சரவாக், சபா மாநிலங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

Remove ads

மாநிலங்களின் முடியாட்சிகள்

Thumb
ஒன்பது மலாய் மாநிலங்களின் மலேசிய மரபுச்சின்னம் அடங்கிய முத்திரை.

தீபகற்ப மலேசியாவின் கெடா, கிளாந்தான், ஜொகூர், பெர்லிஸ், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானு ஆகிய ஏழு மாநிலங்களின் முடியாட்சிகள், ஆண்வழி மரபு ஆதிக்கத்தில் (agnatic primogeniture), மூத்த தலைமகனை ஆட்சியாளராகத் தேர்வு செய்கின்றன்.

பேராக்

பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அரச குடும்பத்தின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் மூத்த நிலை அடிப்படையில், ஆட்சியாளர் ஒருவர் தேர்வு செய்யப் படுகிறார். அந்த ஏழு மாநிலங்களின் ஆட்சியாளர்களும் சுல்தான் எனும் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நெகிரி செம்பிலான் முடியாட்சி

நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அங்கே ஒரு வகையான தேர்வுநிலை முடியாட்சி நடைபெறுகிறது. அதாவது அந்த மாநிலத்தின் பரம்பரைத் தலைவர்களால், அரச குடும்பத்தின் ஆண்களில் ஒருவர் ஆட்சியாளராகத் தேர்வு செய்யப் படுகிறார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் பெசார் என்றும் யாம் துவான் பெசார் என்றும் அழைக்கப்படுகிறார்.

பெர்லிஸ் ராஜா

தீபகற்ப மலேசியாவின் வடக்கில், தாய்லாந்து எல்லையில் அமைந்து இருக்கும் பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சியாளர் ராஜா என்று அழைக்கப் படுகிறார். சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் என்பவர் பெர்லிஸ் சுல்தானாக பதவிக்கு வந்தார்.

இவர் அரபு நாட்டைச் சேர்ந்த ஹாட்ராமி அராப் சாயுட் என்பவரின் தந்தைவழி பேரன் ஆவார். சுல்தான் எனும் அரசப் பதவி ராஜா என்று மாற்றம் அடைந்தது. அதனால், பெர்லிஸ் சுல்தான் என்பவர் பெர்லிஸ் ராஜா என்றே இன்றும் அழைக்கப்படுகின்றனர். இவருடைய சந்ததியினர் தான் இன்னும் பெர்லிஸ் மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.[4]

Remove ads

சட்டமன்றங்கள்

மேலதிகத் தகவல்கள் மாநிலம், மாநில சட்டமன்றம் (தமிழ்) ...

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads