மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway Malaysia (NSE), (மலாய் மொழி: Lebuhraya Utara-Selatan Malaysia) என்பது மலேசியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 1988-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டன.

விரைவான உண்மைகள் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வழித்தடத் தகவல்கள் ...

1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[1]

1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[1]

Remove ads

நீளமும் தொலைவும்

இதன் நீளம் 772 கி.மீ. (480 மைல்கள்). வடக்கே கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சிறுநகரில், மலேசிய - தாய்லாந்து எல்லையில் தொடங்கும் இந்த விரைவு சாலை, தெற்கே ஜொகூர் பாருவில் முடிவுறுகிறது. பின்னர், அங்கு இருந்து வேறு சாலையில் சிங்கப்பூர் வரை தொடர்கிறது.[2]

தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருக்கும் பல முக்கிய மாநகரங்களையும், நகரங்களையும் இணைக்கும் இந்த விரைவுச்சாலை, தீபகற்ப மாநிலங்களின் முதுகெலும்பாகவும் விளங்குகிறது.

இது "பிளஸ்" விரைவுச்சாலை (PLUS Expressway) எனவும் அழைக்கப்படுகிறது. Projek Lebuhraya Utara Selatan என்பதன் சுருக்கமே "பிளஸ்" என்பதாகும்.[2]

Remove ads

மற்ற மாநிலங்களில்

இந்த விரைவுசாலை தீபகற்ப மலேசியாவின் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[3]

ஏற்கனவே இருக்கும் பழைய கூட்டரசு சாலை1க்கு (Federal Route 1) மாற்றுவழியாக இந்த விரைவுசாலை அமைகிறது. AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

மேலோட்டம்

E1  வடக்கு-தெற்கு விரைவுசாலை சில முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு-தெற்கு விரைவுசாலையின் வட பகுதி பாதை, கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சிறுநகரில் இருந்து கோலாலம்பூர் வரை செல்கிறது. இடையில் பினாங்கு பாலத்துடன் ஒருங்கிணைகிறது.[4]

E2  வடக்கு-தெற்கு விரைவுசாலையின் தென்பகுதிப் பாதை, E2   கோலாலம்பூரையும் ஜொகூர் பாருவையும் இணைக்கிறது.

வடக்கு-தெற்கு விரைவுசாலையின் வட பகுதி பாதையின் ஒரு பகுதியான, புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை E6   கிள்ளான், புக்கிட் ராஜா (சிலாங்கூர்) பகுதியில் தொடங்கி ஜாலான் டூத்தா வழியாகக் கோலாலம்பூரை விட்டு வெளியேறுகிறது.

வடக்கு-தெற்கு விரைவுசாலையின் மத்திய இணைப்பு எலைட் (ELITE) என்று அழைக்கப்படுகிறது.[5] 1997-இல் திறக்கப்பட்டது. இந்தப் பாதை சா ஆலாமில் தொடங்கி சுபாங் ஜெயா, புத்ராஜாயா, கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் வழியாக நீலாய் சந்திப்பில் முடிவுறுகிறது.

அதன் பின்னர், சிரம்பான் போர்டிக்சன் நெடுஞ்சாலையைச் E29  சந்தித்து, அலோர் காஜாவைக் கடந்து செல்கிறது. தொடர்ந்து ஆயர் குரோ, தங்காக், யோங் பெங், ஆயர் ஈத்தாம், ஸ்கூடாய் வழியாக ஜொகூர் பாருவைச் சென்று அடைகிறது.

பிளஸ் நெடுஞ்சாலைகள்

நெடுஞ்சாலை E1  E2   நெடுஞ்சாலையுடன் இணைந்து AH2  வடக்கு தெற்கு இணைப்பு
E15   நெடுஞ்சாலை பட்டர்வொர்த் கூலிம் விரைவுசாலை
E36   பினாங்கு பாலம்
E6   AH2  வடக்கு-தெற்கு விரைவுசாலையின் மத்திய இணைப்பு எலைட் (ELITE)

E3   இரண்டாவது இணைப்பு விரைவுசாலை Second Link Expressway

E29   சிரம்பான் போர்டிக்சன் நெடுஞ்சாலை

E1   AH2 கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை

1  AH2  ஸ்கூடாய் நெடுஞ்சாலை (1 March 2004 வரையில்); ஜொகூர் - சிங்கப்பூர் தரைப்பாலம்

2  கூட்டரசு நெடுஞ்சாலை 2

Remove ads

பலவழி சாலைகள்

பொதுவாக, வடக்கு-தெற்கு விரைவுசாலை நான்கு வழிகள் அமைந்ததாக இருக்கும். போவதற்கு இரு வழிகள்; வருவதற்கு இரு வழிகள். சில இடங்களில் போக்குவரத்து மிகுதியாக இருக்கும். அவ்வாறான இடங்களில் போவதற்கு 3 வழிகள்; வருவதற்கு 3 வழிகள். மொத்தம் 6 வழிகள். சில இடங்களில் போவதற்கு 4 வழிகள்; வருவதற்கு 4 வழிகள்; மொத்தம் 8 வழிகள். அவற்றின் விவரங்கள்:

ஆறுவழி சாலைகள்

  • வடக்கு-தெற்கு விரைவுசாலை தென்பகுதி - சுங்கை பீசியில் தொடங்கி ஆயர் குரோ வரையில்
  • புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை - புக்கிட் ராஜா (சிலாங்கூர்) பகுதியில் தொடங்கி ஷா ஆலாம் வரையில்
  • வடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - ரவாங்கில் தொடங்கி சிலிம் ரீவர் வரையில்
  • வடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - சுங்கை டூவாவில் தொடங்கி ஜூரு வரையில்
  • வடக்கு-தெற்கு விரைவுசாலை மத்திய இணைப்பு - ஷா ஆலாம் தொடங்கி நீலாய் வரையில்
  • இரண்டாம் இணைப்பு விரைவுசாலை - ஆயர் ராஜா விரைவுசாலை தொடங்கி சிங்கப்பூர் வரையில்
  • பினாங்கு பாலம் தொடங்கி குளுகோர் வரையில்

எட்டுவழி சாலைகள்

  • வடக்கு-தெற்கு விரைவுசாலை தென்பகுதி - நீலாய் தொடங்கி போர்டிக்சன் வரையில்
  • கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை - ஷா ஆலாம் தொடங்கி ஜாலான் டூத்தா வரையில்
  • வடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - புக்கிட் லாஞ்சான் தொடங்கி ரவாங் வரையில்
Remove ads

ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள்

வாகனமோட்டிகளின் சுகநலம், பாதுகாப்புகள் கருதி, விரைவுசாலையில் 80 - 100 கி.மீ. இடைவெளியில் ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.[6]
E1  வட பகுதிப் பாதையில் ரவாங், தாப்பா, சுங்கை பேராக், குனோங் செமாங்கோல், குருண் ஆகிய இடங்கள்;
E2  தென் பகுதிப் பாதையில் டிங்கில், சிரம்பான், ஆயர் குரோ, பாகோ, மாச்சாப், கேலாங் பாத்தா ஆகிய இடங்களில் ஓய்வு பொழுதுபோக்குத் தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.[7]

Remove ads

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

  • மார்ச் 9, 2007 - 6 பயணிகள், பேராக் மெனோரா சுரங்கப் பாதைக்கு அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.
  • ஆகஸ்ட் 13, 2007 - 20 பேர் பேராக் சங்காட் ஜெரிங் அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.
  • மார்ச் 27, 2008 - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிங்கப்பூரியர்கள், ஜொகூர் தங்காக் அருகே விபத்தில் கொல்லப்பட்டனர். 2 மாத குழந்தை உயிர் தப்பியது.
  • டிசம்பர் 7, 2008 - 10 பயணிகள் ஜொகூர், தங்காக் - பாகோ ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.[8]
  • ஏப்ரல் 13, 2009 - ஆறு பேர் சிலாங்கூர், ரவாங் அருகே இருதள விரைவு பேருந்து விபத்தில் கொல்லப்பட்டனர்.[9]
  • டிசம்பர் 26, 2009 - பேராக், ஈப்போ அருகே பத்து பேர் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.[10]
  • அக்டோபர் 10, 2010 - இரு பேருந்துகள் மோதிக் கொண்டன. பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.[11]
  • ஏப்ரல் 17 2014 - வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கர்பால் சிங் பேராக், கம்பார் அருகில், கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நகருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் கொல்லப்பட்டார்.[12]
  • டிசம்பர் 8 2014 - ஒரு விரைவு பேருந்தும் ஒரு கனரக சுமையுந்தும் மோதிக் கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.[13]
Remove ads

படத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads