மலேசியப் பிரதமர்

From Wikipedia, the free encyclopedia

மலேசியப் பிரதமர்
Remove ads


மலேசியப் பிரதமர் (மலாய்: Perdana Menteri Malaysia; ஆங்கிலம்: Prime Minister of Malaysia; சீனம்: 马来西亚首相; ஜாவி: ڤردان منتري مليسيا) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார். மலேசியப் பேரரசர், பிரதமரை நியமனம் செய்கிறார். மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்ற ஒருவரே பிரதமராகும் தகுதியைப் பெறுகின்றார்.

விரைவான உண்மைகள் மலேசியப் பிரதமர் Prime Minister of Malaysia Perdana Menteri Malaysia, பதவி ...

பிரதமராகப் பொறுப்பு ஏற்கும் ஒருவர் மலேசிய அமைச்சரவையின் தலைவராகவும் செயல் படுகின்றார். மலேசிய அமைச்சரவை உறுப்பினர்களைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் மலேசியப் பேரரசர் நியமனம் செய்கிறார். அந்த அமைச்சரவை மலேசிய நாடாளுமன்றத்தின் முழு பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறது.

பிரதமரின் கீழ், மலேசியப் பிரதமர் துறை எனும் அமைச்சு செயல்படுகின்றது. அன்வர் இப்ராகீம் என்பவர் மலேசியாவின் இப்போதைய பிரதமராகப் பதவி வகிக்கிறார்.

Remove ads

தகுதிகள்

மலேசிய அரசியலமைப்பின் படி ஒரு பிரதமராகக் கூடியவர் மக்களவையில் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெற்று இருக்க வேண்டும். அவர் ஒரு மலேசியராக இருக்க வேண்டும். அவர் அயல்நாட்டில் இருந்து குடியேறி குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது.

பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் பேரரசரிடம் உறுதிமொழி எடுக்க வேண்டும். மலேசியா விடுதலை அடைந்ததில் இருந்து பாரிசான் நேசனல் - அம்னோவைச் சேர்ந்த ஒருவரே பிரதமராக இருந்து வந்துள்ளார்.

இருப்பினும் 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாக்காத்தான் அரப்பான் முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதால் 19 நவம்பர் 2022-இல், முன்கூட்டியே ஒரு பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு, பின்னர் 24 நவம்பர் 2022-இல் அன்வார் இப்ராகிம் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

Remove ads

பிரதமர் பதவியில் துன் சம்பந்தன்

மலேசிய வரலாற்றில், ம.இ.காவின் தலைவர் வீ. தி. சம்பந்தன் அவர்களும்; மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக் (Ling Liong Sik) அவர்களும்; மலேசியாவின் பிரதமர்களாகத் தற்காலிகமாகப் பதவி வகித்துள்ளனர்.[1] துன் சம்பந்தன் 1973 ஆகஸ்டு 3-ஆம் தேதி, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.[2]

முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் வெளிநாட்டில் இருந்த போது, துணைப் பிரதமராக இருந்த துன் இஸ்மாயில் மரணம் அடைந்தார். அந்தக் கட்டத்தில் துன் சம்பந்தன் தற்காலிகப் பிரதமராகப் பதவி வகித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

Remove ads

பிரதமர் பதவியில் லிங் லியோங் சிக்

மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லிங் லியோங் சிக், 1988 பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி; 1988 ஆகஸ்டு 16-ஆம் தேதி வரை, மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.

1988-ஆம் ஆண்டில், பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைமை உறுப்புக் கட்சியான அம்னோ சட்டவிரோத அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. துன் மகாதீர், பாரிசான் நேசனல் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் விளைவாக லிங் லியோங் சிக், பாரிசான் நேசனல் கூட்டணியின் புதிய தலைவரானார். புதிய கட்சியான அம்னோ பாரு, சங்கங்களின் பதிவு அதிகாரியால் சட்டப் பூர்வமாக்கப்படும் வரை, 12 நாட்களுக்கு லிங் லியோங் சிக், பிரதமராகப் பணியாற்றினார்.[3]

பிரதமர் நியமனம்

மலேசியப் பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள், மலேசியப் பிரதமரை நியமிக்கின்றார். பிரதமர் நியமிக்கப் பட்டதும் அவரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களையும் பேரரசர் நியமிக்கின்றார்.[4]

பிரதமரின் ஆலோசனையின் பேரில் எந்த ஓர் அமைச்சரின் நியமனத்தையும் பேரரசர் எந்தக் கட்டத்திலும் ரத்து செய்யலாம். இருப்பினும், பிரதமரைத் தவிர மற்ற அமைச்சர்கள் பேரரசரின் விருப்பத்தின் பேரில் பதவியில் இருக்கலாம். அதே வேளையில் எந்த ஓர் அமைச்சரும் அவருடைய பதவி காலத்தில் அவரின் அமைச்சர் பதவியைத் துறப்பு செய்யலாம்.

நடைமுறையில், அமைச்சர்களின் நியமனம் அல்லது அமைச்சர்களின் பதவி நீக்கம் குறித்து பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பேரரசர் உள்ளார்.

Remove ads

அமைச்சரவைப் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் அமைச்சரவை பெயர், அமைச்சரவை தலைவர் ...
Remove ads

மலேசியப் பிரதமர்களின் பட்டியல்

கட்சி:       அம்னோ கூட்டணி:       மலாயா கூட்டணி       பாரிசான் நேசனல்

மேலதிகத் தகவல்கள் தவணை, எண். ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads