மாங்குளம், மதுரை மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மாங்குளம், மதுரை மாவட்டம்map
Remove ads

மாங்குளம் (Mangulam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது மதுரை நகரில் இருந்து கிழக்கே மேலூர் செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.[4] மாங்குளத்திற்குத் தெற்கே மதுரை மேற்கு வட்டம், மேற்கே அலங்காநல்லூர் வட்டம், மேற்கே மதுரை கிழக்கு வட்டம், வடக்கே நத்தம் வட்டம் ஆகியன அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள்
Thumb
மாங்குளம் கல்வெட்டுகள்
Thumb
தற்காலத் தமிழில் மாங்குளம் கல்வெட்டின் செய்திகள்
Remove ads

சிறப்புகள்

இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டுகள் ஆகும்.[5][6] மாங்குளத்தை அடுத்துள்ள மலைப் பகுதியில்[4][7] உள்ள குகைகளில் தமிழ்ச் சமணத் துறவிகளின் படுக்கைகள் காணபடுகின்றன.[8] சமணத் துறவிகள் இங்கு கிபி 9ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்துள்ளனர்.[6]

மாங்குளம் கல்வெட்டுகள் 1882 ஆம் ஆண்டில் இராபர்ட் சுவெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[9] இங்குள்ள மலையில் காணப்படும் ஐந்து குகைகளில் நான்கில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] இவற்றில் சங்க காலப் பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.[10] இக்கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.[11]

Remove ads

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads