மார்கியானா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்க்கியானா (Margiana) நடு ஆசியாவில் அமைந்த பாலைவனச் சோலை நகரம் ஆகும். இது கிமு 281 முதல் கிபி 651 முடிய அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளின் கீழ் ஒரு மாகாணமாக விளங்கியது. இதன் தலைநகரம் மெர்வி ஆகும். தற்போது மார்க்கியானா பிரதேசம் ஆப்கானித்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் பரவியுள்ளது. மார்க்கியானாவில் கிமு 1500 முதல் கிமு 500 வரை யாஸ் பண்பாடு நிலவியது.
Remove ads
எல்லைகள்
மார்க்கியானாவின் தென்மேற்கில் பார்த்தியாவும், தெற்கில் ஆரிய மாகாணமும், கிழக்கில் பாக்திரியாவும், வடக்கில் சோக்தியானாவும் இருந்தது.

சமயங்கள்
பட்டுப் பாதையில் அமைந்த மார்க்கியானாவை ராசிதீன் கலிபாக்கள கைப்பற்றுவதற்கு முன் இப்பகுதி மக்கள் சொராட்டிரிய நெறி, பௌத்தம், கிறித்துவம், யூத சமயங்களைப் பயின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads