மால்டா மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மால்டா மக்களவைத் தொகுதி (Malda Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மால்டாவினை மையமாகக் கொண்டது. இது 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது. இந்த இடம் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மிகவும் செல்வாக்கான இடமாக இருந்தது.
Remove ads
சட்டமன்றத் தொகுதிகள்
மால்டா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
- அபீபூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 39)
- ஆரைடங்கா (சட்டப்பேரவைத் தொகுதி எண். 44)
- மால்டா (சட்டப்பேரவை தொகுதி எண். 45)
- இங்கிலீஷ்பஜார் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 46)
- மணிக்சக் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 47)
- சுசாப்பூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 48)
- கலியாசக் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 49)
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மால்டா நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. தற்போதைய அரசியலமைப்பு சட்டமன்றத் தொகுதிகள் புதிய தொகுதிகளில் ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கும். இப்புதிய மக்களவைத் தொகுதிகள் மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி, மால்டா தெற்கு மக்களவைத் தொகுதி ஆகும்.[2]
Remove ads
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி மற்றும் மால்டா தெற்கு மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.
Remove ads
தேர்தல் முடிவுகள்
இடைத்தேர்தல் 2006
2006 செப்டம்பர் 13 அன்று இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, இது தற்போதைய எம். பி. ஏ. பி. எ. கானி கான் சவுத்ரியின் மரணத்தால் அவசியமானது. இந்த இடைத்தேர்தலில், காங்கிரசு கட்சியின் அபு அசீம் கான் சவுத்ரி தனது நெருங்கிய போட்டியாளரான இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் சைலன் சர்க்காரை 84,391 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads