மாவீரர் துயிலும் இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பு, மாவீரர் துயிலுமில்லம் எனப்படும்.[1] விடுதலைப்புலி வீரர்களின் உடலங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு புதைக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்காக உயிர் நீத்தவர்களின் உடலங்களை வித்துடல்கள் என்றும் உடலங்கள் புதைக்கப்படுவதை விதைக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். [2]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 விழுக்காடும், மட்டு - அம்பாறையில் 18 விழுக்காடும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 விழுக்காடும் உள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணியொலி எழுப்பப்பட்டு, சுடர் ஏற்றப்படும். இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.
Remove ads
முதலாது துயிலும் இல்லம்
முதலாது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில் விடுதலைப்புலிப் போராளிகளின் உடலங்கள் அவரவர் பெற்றோர்களின் மதநம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப புதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் வந்தன.[2] 1991இல் உடலங்கள் எரிக்கப்பட மாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள்
அம்பாறை மாவட்டம்



மட்டக்களப்பு மாவட்டம்
- தரவை மாவீரர் துயிலுமில்லம்
- தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்
- கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்
- மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்
திருகோணமலை மாவட்டம்
- ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
- தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்
- பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்
- உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்
மணலாறு மாவட்டம்
- ஜீவன்முகாம்/ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்
- கோடாலிக்கல்/ புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்
வவுனியா மாவட்டம்
- ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
மன்னார் மாவட்டம்
- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்
- பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
- முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்
முல்லைத்தீவு மாவட்டம்
- முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்
- விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்
- அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்
- ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
- வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
கிளிநொச்சி மாவட்டம்
- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
- முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்
யாழ்ப்பாண மாவட்டம்

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads