மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர் மாநகரில் உள்ள நிலத்தடி எம்ஆர்டி நிலையம் From Wikipedia, the free encyclopedia

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம்map
Remove ads

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Merdeka MRT Station; மலாய்: Stesen MRT Merdeka) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் KG17 மெர்டேக்கா, பொது தகவல்கள் ...

முன்பு இந்த நிலையம் சுங்கை பூலோ-காஜாங் வழித்தட நிலையம் என அறியப்பட்டது. தற்போது செரி பெட்டாலிங் வழித்தடம்; அம்பாங் வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்திற்கான பரிமாற்ற நிலையமாகச் செயல்படுகிறது.

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் கீழ் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.

Remove ads

பெயர்

இந்த நிலையத்தின் பெயர் மெர்டேக்கா; அதாவது விடுதலை என்று பொருள்படும். மேலும் இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேக்கா அரங்கத்தின் (Stadium Merdeka) பெயரிலிருந்து இந்த நிலையத்திற்கும் பெயர் சூட்டப்பட்டது. மெர்டேக்கா அரங்கத்தில்தான் மலாயா கூட்டமைப்பின் (Federation of Malaya) விடுதலை ஆகத்து 31, 1957 அன்று அறிவிக்கப்பட்டது.

மேலும் நிலைய வளாகத்தில் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) உள்ளது. இந்த நிலையம் ஆங் ஜெபாட் சாலை (முன்னர் ஜாலான் டேவிட்சன்) கீழ் அமைந்துள்ளது. இந்த நிலையம் மெர்டேக்கா அரங்கம், 118 மால் (en:118 Mall) போன்ற வரலாற்று இடங்களுக்கு அருகில் உள்ளது.[1][2][3]

Remove ads

அருகிலுள்ள நிலையங்கள்

இந்த நிலையம் 180 மீட்டர் பாதசாரி இணைப்புப் பாதை வழியாக  SP8  AG8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்புப் பாதை இரு நிலையங்களின் கட்டணப் பகுதிகளையும் இணைக்கிறது. இதனால் பயணிகள் 9 சுங்கை பூலோ-காஜாங் எம்ஆர்டி வழித்தடம் மற்றும் 4 செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய வழித்தடங்களுக்கு இடையே தடையில்லா தொடருந்து போக்குவரத்தை மேற்கொள்ள இயலும்.

மேலும் இந்த நிலையம்  SP9  AG9  ஆங் துவா நிலையம் மற்றும்  MR4  ஆங் துவா மோனோரெயில் நிலையத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில்; நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது

Remove ads

காஜாங் வழித்தடம்

9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[4]

நிலைய அமைப்பு

G தெருநிலை நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) ஆங் ஜெபாட் சாலை, (→) வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள் (→) நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் மற்றும் படிக்கட்டுகள் (→) மேல் கீழ் இணைப்புவழி
B1 எம்ஆர்டி மேல் இணைப்புவழி (→) 118 மால்
B2 எம்ஆர்டி கீழ் இணைப்புவழி எம்ஆர்டி நிலையக் கட்டுப்பாடு, எம்ஆர்டி வாடிக்கையாளர் சேவை அலுவலகம், டிக்கெட் இயந்திரங்கள் மற்றும் கட்டண நுழைவாயில்கள் (→) நுழைவாயில் C, (→) பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழி (→) நடைபாதை
B4 எம்ஆர்டி நடைபாதை நடைமேடை 1: 9  காஜாங்  (→)  SBK35  காஜாங் (→)
தீவு மேடை - கதவுகள் வலதுபுறம் திறக்கும்.
Platform 2: 9  காஜாங்  (→)  KG04  குவாசா டாமன்சாரா (←)
Remove ads

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

மேலதிகத் தகவல்கள் நுழைவாயில், இடம் ...
Remove ads

காட்சியகம்

மெர்டேக்கா எம்ஆர்டி நிலையம் (2022)

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads